BSNL-ன் அதிரடி offer: Free-யாக செய்யலாம் mobile recharge!!
வாடிக்கையாளர்கள் தங்கள் BSNL மொபைல் இணைப்பிற்கு Paytm மூலம் ரீசார்ஜ் செய்யும் போது அவர்களுக்கு அப்போதே கேஷ்பேக் கிடைக்கும்.
புதுடெல்லி: BSNL மீண்டும் தன் பழைய முனைப்புடன் வாடிக்கையாளர்களிடையே வந்துள்ளது. அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL, அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன. இப்போது BSNL வாடிக்கையாளர்களுக்காக இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Paytm மூலம் முதன் முறையாக ரீசார்ஜ் செய்தால் 100% கேஷ்பேக்
BSNL சமீபத்தில் ஆன்லைன் கட்டண தளமான Paytm உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு Paytm மூலம் முதல் ரீசார்ஜ் செய்யும்போது 100% கேஷ்பேக் கிடைக்கும். அதாவது, வாடிக்கையாளர்கள் Paytm மூலம் ரீசார்ஜ் செய்வதற்கு எந்த பணத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த புதிய பிரச்சாரத்திற்கு ‘First Recharge Free’ அதாவது 'முதல் ரீசார்ஜ் இலவசம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ALSO READ: 195 ரூபாய்க்கு Apple One! அதிர வைக்கும் விலைப் பட்டியல்
இதுதொடர்பாக, BSNL ஒரு ட்வீட்டையும் மக்களுடன் பகிர்ந்துள்ளது.
பெறப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் BSNL மொபைல் இணைப்பிற்கு Paytm மூலம் ரீசார்ஜ் செய்யும் போது அவர்களுக்கு அப்போதே கேஷ்பேக் கிடைக்கும். கேஷ்பேக்கின் (Cashback) அதிகபட்ச தொகை 50 ரூபாய் ஆகும். அதாவது, வாடிக்கையாளர்கள் Paytm இலிருந்து ரீசார்ஜ் செய்யும்போது, இந்த தொகை அவர்களின் Paytm கணக்கில் வந்துவிடும்.
BSNL 365 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு (Prepaid Customers) ரூ .365 திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக BSNL தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு ஆண்டு அதாவது 365 நாட்கள் ஆகும். இந்த ரீசார்ஜில், வாடிக்கையாளர்கள் தினமும் 250 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். இது தவிர, வாடிக்கையாளர்கள் தினமும் 100 SMS-களையும் இலவசமாக அனுப்பலாம்.
ALSO READ: Google Pay-வின் Go India திட்டம் மூலம் இலவச கோவா டிக்கெட் பெறுவது எப்படி?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR