அலுவலக பயணத்தின் போது  ஏற்பட்ட உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டு இடந்த பணியாளருக்கு பிரெஞ்சு நிறுவனம் பொறுப்பேற்க உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலுவலம் குறித்த பணிக்காக சென்ற இடத்தில் ஊழியர் அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு  இறந்துள்ளார். இதையடுத்து, அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
 
இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது. ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரெஞ்சு சட்டம் என்று நீதிபதிகள் கூறினர். சேவியர் எக்ஸ் என்ற அந்த அலுவலர் TSO என்ற பாரிஸைச் சேர்ந்த ரயில்வே சேவைகள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.


2013 ஆம் ஆண்டில் மத்திய பிரான்ஸ் பகுதிக்கு அலுவலக பயணம் சென்றிருந்தபோது, ஒரு விடுதியில் அவர் மரணம் அடைந்தார். ``முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதால்'' ஏற்பட்ட சம்பவம் என்று அவருடைய நிறுவனம் கூறியது. பணியிட விபத்தாக கருதி அவருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று அரசு சுகாதாரக் காப்பீட்டு நிறுவனம் அளித்த முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
 
உடலுறவு செயல்பாடு என்பது இயல்பானது, ``குளிப்பது அல்லது உணவு சாப்பிடுவதைப் போன்றது'' என்று காப்பீட்டு நிறுவனம் கூறியது. இந்தக் கருத்தை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அலுவல் காரணமாக பயணம் மேற்கொண்டிருக்கும் ஓர் அலுவலர், ``பயண காலம் முழுவதற்கும்'' சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், சமூகப் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெறுகிறார் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.