சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துளாதால், சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது எனலாம். 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் (LPG gas cylinde ) விலை 809 ரூபாய் என்ற அளவில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், அனைவரும் சந்தோஷம் அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. 


நீங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை ( Digital Transaction) செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது  உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.  இதஃன் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தும் போது, 809 ரூபாய்க்கான ஒரு சிலிண்டரை டெல்லியில் ரூ.9  என்ற விலையில் பெறலாம். இந்த சலுகை ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகளும் அடங்கியுள்ளன.


முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து Paytm மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். வாடிக்கையாளருக்கு ரூ.800 கேஷ்பேக்கிற்கான (cashback)   ஒரு ஸ்க்ராட்ச் கார்டு (scratch card) கிடைக்கும். இந்த சலுகை முதல் எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவுக்கு  பொருந்தும். 


ALSO READ | Today's Gold Rate: தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா...


இந்த சலுகை குறைந்தபட்சம் ரூ .500 செலுத்தும் போது தான் கிடைக்கும். கேஷ்பேக்கிற்கு, நீங்கள்  ஸ்க்ராட்ச் கார்டை ஓபன் வேண்டும்.  நீங்கள் பில் கட்டணம் செலுத்திய பிறகு கேஷ் பேக் கிடைக்கும். கேஷ்பேக் தொகை ரூ .10 முதல் ரூ .800 வரை இருக்கலாம். இந்த ஸ்ராட்ச் கார்டை (scratch card), 7 நாட்களுக்குள் ஓபன் செய்ய வேண்டும், ஏனெனில் அதற்குப் பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது.


கேஷ்பேக் (Cashnback) சலுகையை பெறுவது எப்படி: 


வழிமுறை 1: உங்கள் மொபைல் தொலைபேசியில் Paytm செயலியை பதிவிறக்கவும். 


வழிமுறை 2: உங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். இதற்காக, Paytm செயலியில் Show More என்பதை கிளிக் செய்யவும். 


வழிமுறை 3: பின்னர் ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்கள் என்பதைக் கிளிக் செய்க. 


வழிமுறை 4: ஒரு சிலிண்டரை பதிவு செய்வதற்கான ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். இங்கே, உங்கள் எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுக்கவும். 


வழிமுறை 5: முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG  என்ற விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும். 


வழிமுறை 6: முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ராட்ச் அட்டை கிடைக்கும். 


வழிமுறை 7: இந்த ஸ்ராட்ச் கார்டை7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.


ALSO READ | கிரிப்டோகரன்சி Bitcoin மதிப்பு $56,580, அதன் மதிப்பு அதிகரிப்பதன் மர்மம் என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR