கல்யாணத்தை நிறுத்திட்டீங்களா? மாப்பிள்ளை வீட்டில் தகராறு செய்த பெண்
Broken Marriage Emotion: திருமணம் நின்ற விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட பெண்; சம்பவமறிந்து சென்ற தலைமை காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்ததால் பரபரப்பு
சென்னை: திருமணம் நின்ற விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட பெண்; சம்பவமறிந்து சென்ற தலைமை காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை திருவொற்றியூர் எஸ் பி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரேவேந்திரன் தனியார் வங்கி ஊழியரான இவரும் புதுவண்ணாரப்பேட்டை பூணடிதங்கமாள் தெரு பகுதியில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது
இந்நிலையில் மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி 5 சவரன் நகை, இரு சக்கரவாகனம் மற்றும் ஒரு லட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்டநிலையில் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் விரக்தியடைந்த செல்வி அவ்வபோது ரேவேந்திரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்... பழங்குடியின பெண்ணை கொடுமை செய்த பாஜக மூத்த தலைவர்!
இந்நிலையில் நேற்று மாலை காதலன் வீட்டிற்கு சென்று காதலன் இல்லாத சமயத்தில் ரேவேந்திரனின் பெற்றோரிடம் சண்டையிட்டு தகாத ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ரேவேந்திரனின் தாயார் ரேனுகா காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சமரசம் பேச முற்பட்டுள்ளார். ஆனால், செல்வி அவரின் பேச்சை மறுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அதை செல்போனில் படம் பிடித்த தலைமை காவலரின் வலது கையை பிடித்து கடித்த செல்வி, தலைமை காவலர் சரவணனின் சட்டையை பிடித்து கிழித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு; கடுமையான நடவடிக்கை தேவை
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.
பின்னர் கொலைமிரட்டல் விடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், தகாத வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற ஆறு பிரிவுகளில் செல்வி மீது வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். திருமணம் நின்ற விரக்தியில் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சண்டையிட்டதும், தடுக்க சென்ற காவலரின் கையை பிடித்து கடித்துவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | நடிகை மகாலட்சுமி சங்கரை மணம் முடித்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ