காதல் ரகசியம் என்றாலும், காதலர்களுக்கு இடையில் எந்த ரகசியமும் இருக்கக்கூடாது என்பதை தான் காதலிப்பவர்கள் விரும்புவது.  காதல் என்றாலே இந்த விஷயம் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஏராளம். குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தங்கள் பார்ட்னரின் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி தங்களின் முந்தைய வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விஷயத்ததில் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உஷாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. எந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் பொதுவாக மறைக்கிறார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | கடுமையான நோய்களைக் காட்டும் கால்கள் - இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்


ஒருவர் மீதான க்ரஷ்


காதலிக்க விரும்பியவர் அல்லது விரும்பிய ஒருவரைப் பற்றி பெண்கள் தங்கள் பார்ட்னரிடம் சொல்ல விரும்புவதில்லை. காதலனுக்கு அல்லது பார்ட்னருக்கு இந்த விஷயம் தெரிய வந்தாலும், அந்த விஷயத்தை முழுமையாக பேச அனுமதிப்பதே இல்லை அல்லது கூடுதலான தகவல்களை சொல்லமாட்டர்கள். மேம்போக்காக சொல்லி அந்த விஷயத்தை மடைமாற்றிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் முன்னாள் காதலன் அல்லது விரும்ப நினைத்தவரின் பெயரைக் கூட சொல்லமாட்டர்கள் அல்லது தவறாக சொல்லிவிடுவார்கள். 


தோழிகளுடன் சேட்டை


பெண்கள் பெரும்பாலும் தங்கள் தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சந்திக்கும் போதெல்லாம் நிறைய பேசுவார்கள். ஆண்கள் எப்படி தங்கள் நண்பர்களுடன் உரையாடுவார்களோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் பெண்களும் அரட்டை அடிப்பார்கள். கிண்டல், கேலி உள்ள அனைத்தும் அவர்களின் உரையாடலில் இருக்கும். ஆனால் தாங்கள் விரும்பும் பெண்களிடம் பெருமையாக ஆண்கள் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பெண்கள் அப்படி செய்யமாட்டார்கள். மாறாக, தங்களின் பார்ட்னரை கடிந்து கொள்வார்கள். 


ஆண் நண்பர்கள் உரையாடல்


உங்கள் காதலி அல்லது மனைவிக்கு சில ஆண் நண்பர்கள் இருக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களைப் பற்றி தங்கள் பார்ட்னரிடம் வாய் திறக்க மாட்டார்கள். ஆண் நண்பர்களுடன் சகஜமாக பேசுவதை காதலன் அல்லது பார்ட்னரிடம் பகிர்ந்து கொண்டால் சிக்கல் எழ வாய்ப்பு இருக்கும் கருதி மறைத்துவிடுவார்கள். 


EX காதல் பற்றி


பெண்கள் தங்கள் EX காதல் பற்றி பேச விரும்புவதில்லை. முந்தைய உறவில் ஏற்பட்ட சிக்கல்கள், அவர்களுடன் பழகிய விதங்களை இப்போது இருக்கும் துணையிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் உறவுச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதில் தெளிவாக இருப்பார்கள். 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் பிரச்சனைதான்


அழகு ரகசியங்கள்


சிலர் இப்படியும் இருக்கிறார்கள். தங்களின் அழகு ரகசியத்தை பார்ட்னரிடம் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இருக்காது. அவர்களைப் பொருத்தவரை அழகாக இருக்கிறாய் என்பதை மட்டும் சொல்ல வேண்டும். இதற்காக என்ன செய்கிறாய் என்று கேட்டால் கோபம் வந்துவிடும். சிலர் எதுவும் செய்யவில்லை, பிறவி அழகு என மழுப்பிவிடுவார்கள். 


(பொறுப்பு துறப்பு; தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. உண்மை தன்மைக்கு உகந்ததல்ல)


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR