திருமணத்துக்கு முன்பு HIV பரிசோதனை கட்டாயம்: வருகிறது புதிய திட்டம்
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் HIV பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டம்!!
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் HIV பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டம்!!
கோவா: திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதற்கான சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; "கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு HIV பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம்" என்று அவர் கூறினார்.
கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது, என்றார். அவர் மேலும் கூறுகையில், “இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.
2006 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை முன்மொழிந்தது, இது பல தரப்பினரின் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.