Gold rates today, 29 August, 2021: கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை (Gold Rate) தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.


தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  


ALSO READ: Gold Rate Today: ஒரே நாளில் எக்கச்சக்கமாய் உயர்ந்தது தங்கத்தின் விலை, விவரம் இதோ


இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 150 உயர்ந்து ரூ. 46,700 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 150 அதிகரித்து ரூ. 50,930 ஆகவும் உள்ளது.


சென்னையில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 230 உயர்ந்து ரூ. 45,070 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 250 அதிகரித்து ரூ. 49,170 ஆகவும் உள்ளது.


கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 47,100 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.  மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,650 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,650 ஆகவும் விற்பனையில் உள்ளது. 


வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 63,800 ஆக உள்ளது. 


சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.


தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,000-5,000 டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு (Investment) செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.


ALSO READ: Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR