கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. ஆனா தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்
விலை அதிகரித்தால், தங்கத்தின் மீது அதிக அளவு கடன் பெறலாம். பாதுகாப்பற்ற கடன்களுக்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கிய பிறகு தங்கக் கடன்கள் அதிகரித்துள்ளன.
தங்கம் விலை (Gold Prices) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எம்சிஎக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.62,197 ஆக உள்ளது. தங்கம் வாங்கும் மக்கள் அதன் விலை உயர்வால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், கோல்ட் லோன் வாங்குபவர்களுக்கு இது நன்மை பயக்கும். தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் பெறலாம். தங்கத்தின் மீது ஏற்கனவே வாங்கிய கடனிலும் டாப்-அப் கடன் பெறலாம். வங்கிகள், NBFCகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தங்கத்தின் மீதான கடனை அடமானமாக வழங்குகின்றன. இதை தான் நாம் கோல்ட் லோன் என்று அழைக்கப்படுகிறது.
தங்கக் கடன் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது:
பாதுகாப்பற்ற கடன்கள் மீதான ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளால் தங்கக் கடன்கள் அதிகரித்து வருகின்றன. 2020 செப்டம்பரில் ரூ.46,791 கோடியாக இருந்தது, 2023 செப்டம்பரில் ரூ.97,660 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 27,000 டன் தங்கம் உள்ளது. இதில் சுமார் 14 சதவீதம் அதாவது 5,300 டன் கோல்ட் லோன் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோல்ட் லோன் குறித்த பழைய சிந்தனை தற்போது மாறி வருவதாக வங்கிகள் கூறுகின்றன.
தங்கம் விலைகள் அதிகரித்தால் அதிக கடன் தொகை பெறலாம்:
தங்கத்தின் விலை அதிகரித்தால், தங்கத்தின் மீது அதிக அளவு கடன் பெறலாம். Augmont Gold இயக்குனர் சச்சின் கோத்தாரி கூறுகையில், தங்கம் விலைகள் உயரும்போது, வங்கிகள் அல்லது NBFCகள் அதிக கடன்-மதிப்பு (LTV) விகிதங்களை வழங்குகின்றன. இதற்குக் காரணம், விலை உயரும் போது தங்கத்தின் மதிப்பு உயரும். இருப்பினும் தங்கத்தின் முழு மதிப்புக்கு இணையான கடன் உங்களுக்குக் கிடைக்காது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம ஜாக்பாட்.. வட்டியை பயங்கரமாக வாரி வழங்கும் 3 வங்கிகள்
வங்கிகள் 25 சதவீத மார்ஜினை வைத்திருக்கின்றன:
இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, உங்களிடம் இருக்கும் ஒரு கிராம் தங்கத்தில் நீங்கள் கடன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.5,873 ஆக இருக்கும். இதில் அதிகபட்சமாக 75 சதவீதம் அதாவது ரூ.4,100-4,200 வரை கடன் பெறலாம். தங்கம் விலை குறைந்தால் வங்கிகள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்காக 25 சதவீத மார்ஜினை வைத்துள்ளன.
கோவிட் காலத்தில் 90 சதவீத மதிப்பு:
இதனிடையே NBFCகள் மற்றும் fintech நிறுவனங்களை விட வங்கிகள் தங்கத்தின் மீது அதிக கடன்களை வழங்குகின்றன என்ற கருத்து உள்ளது. இது தவறு. ஆகஸ்ட் 2020 மற்றும் மார்ச் 31, 2021 க்கு இடையில் மட்டுமே, தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதத்திற்கு சமமான கடன் வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் கொரோனா தொற்று. இப்போது மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. உங்களிடம் 20 கிராம் தங்கம் இருந்தால், 75 சதவீத மதிப்பின்படி, விண்ணப்பித்த 2 மணி நேரத்தில் ரூ.80,000 கடன் பெறலாம்.
தங்கக் கடனைத் திருப்பிச் செலுத்த இரண்டு வழிகள் உள்ளன:
கடனாக வாங்கிய தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பி செலுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அசல் மற்றும் வட்டியாகிய இரண்டையும் மாதா மாதம் செலுத்தலாம். நிலையான மாத வருமானம் வாங்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷன். இரண்டாவதாக வட்டியை மாதா மாதம் செலுத்தி விட்டு, லோன் கால அளவு முடியும் பொழுது இறுதியில் அசல் தொகையை செலுத்தலாம்.
கூடுதலாக அசல் மற்றும் வட்டியை தங்களால் முடியும் பொழுது அவ்வப்போது செலுத்தி விட்டு இறுதியில் மீதம் இருக்கக்கூடிய தொகையை செலுத்தலாம். புல்லட் பேமெண்ட் ஆப்ஷனில் வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் லோன் கால அளவு முடியும் பொழுது செலுத்தினால் போதுமானது. நகை கடனுக்கான வட்டி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் கணக்கிடப்படுகிறது. பொதுவாக நகைக்கடனை திருப்பி செலுத்தாததற்கு எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் முன்பாக கடன் பெற்ற நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீஸூக்கு இமெயில், டெக்ஸ்ட் மெசேஜ், போன் கால் மற்றும் லெட்டர் மூலமாக தகுந்த பதில் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஜாக்பார்ட்! இந்த அரசு ஊழியர்களின் சம்பளம்-ஓய்வூதியம் அதிகரிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ