உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்படும் போது, நகைக்கடன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் தங்கக் கடனை ஒருவர் எளிதாகப் பெறலாம். தனிநபர் கடனை விட மலிவானது. வங்கிகள், NBFC நிறுவனங்கள் அல்லது பிற நிதி நிறுவனங்களில் தங்கத்தை அடகு வைத்து எளிதாக கடன் பெறலாம். குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும்  சில முக்கியமான வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள்


- பெடரல் வங்கி - 8.50 சதவீதம்


- எஸ்பிஐ (SBI) - 7.30 சதவீதம்


- பஞ்சாப் & சிந்து வங்கி - 7 சதவீதம்


- பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) - 8.75 சதவீதம்


- கனரா வங்கி - 7.35 சதவீதம்


- இந்தியன் வங்கி - 7 சதவீதம்


- பாங்க் ஆஃப் பரோடா (BOB) - 9.00 சதவீதம்


- கர்நாடகா வங்கி - 8.49 சதவீதம்


- ஐடிபிஐ வங்கி (IDBI) - 7 சதவீதம்


- HDFC வங்கி - 11 சதவீதம்


(குறிப்பு: இந்த புள்ளிவிவரங்கள் ஆன்லைன் சந்தையான BankBazaar.com ஆல் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பொது-தனியார் வங்கிகள் மற்றும் BSE மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட NBFCகள் அடங்கும்.)


மேலும் படிக்க | அதிகளவில் விற்பனையாகும் 5ஜி போன்கள்


நகைக்கடன் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


1. கடன் வாங்குவதற்கு முன் உங்கள் தங்கம் 18 காரட்டுக்குக் குறைவாக இருக்கக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் பல வங்கிகள் 18 காரட்டுக்கும் குறைவான தங்கக் கடனை வழங்குவதில்லை.


2. தங்கக் கடன் வாங்க ஆதார் அல்லது பான் கார்டு இருப்பது கட்டாயம். 


3. சாதாரண கடனைப் போலவே, தங்கமும் குறிப்பிட்ட கால அளவில் வழங்கப்படுகிறது. வங்கிகள் 3 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை சாதாரண தங்கக் கடன்களை வழங்குகின்றன.


4. எப்போதும் அரசு வங்கிகளில் மட்டுமே தங்கக் கடன் வாங்க முயற்சிக்கவும். ஏனெனில் இங்கு வட்டி விகிதம் குறைவு.


தனிநபர் கடனை விட தங்கக் கடன் மிகவும் மலிவானது. மேலும், தங்கக் கடனுக்கான ஒப்புதல் பெறுவதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும். இத்தகைய சூழ்நிலையில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், சாதாரண மக்களின் முதல் தேர்வாக தங்கக்கடன் மாறியுள்ளது.


மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR