Gold / Silver Rate Today: இன்றைய விலை நிலவரம் என்ன?
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
Gold / Silver Rate Today: தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) ரூ.4,533 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய விலை 4,527 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 8 கிராம் தங்கத்தின் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 36,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 36,216 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தூய தங்கத்தைப் பொறுத்தவரை, இன்று விலையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,897 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று இதன் விலை 4,891 ஆக இருந்தது.
வெள்ளியின் விலையிலும் (Silver Rate) இன்று ஏற்றம் ஏற்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10 ஆக உள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.72.50 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 73,100 ஆக உள்ளது.
ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்
தேசிய அளவில் பார்க்கையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை டெல்லியில் ரூ.4,710 ஆகவும், மும்பையில் ரூ.4,717 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,735 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,490 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,490 ஆகவும், கேரளாவில் ரூ.4,496 ஆகவும் உள்ளது.
எனினும், உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
ALSO READ: Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR