Gold rates today, 27 July 2021: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ. 46,950 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ. 51,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுகிறது.


சென்னையில் (Chennai) 22 காரட் 10 கிராமுக்கு தங்க விலை ரூ. 140 உயர்ந்து ரூ .45,200 ஆக உயர்ந்தது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ. 49,310 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.


கொல்கத்தாவில் 22 கிராட் 10 கிராம் தங்கத்தின் விலை 22 காரட் 10 கிராமுக்கு 47,250 ரூபாயாகவும் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 49,950 ஆகவும் விற்பனையில் உள்ளது.


ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன


மும்பையில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Rate) ரூ. 46,870 ஆகவும் 24 கரான் 10 கிராம் தங்கத்தின் விலை 47,870 ரூபாயாகவும் உள்ளது.


இதற்கிடையில், இன்று காலை நிலவரப்படி மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் வெள்ளி விலை ரூ .67,500 ஆகவும், சென்னையில் வெள்ளி விலை ரூ. 72,100 ஆகவும் உள்ளன.


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் (Silver Rate) காலை 8 மணி அளவில் எடுக்கப்பட்டன. மேலும் இவற்றில் நாள் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.


சர்வதேச நாணய சந்தையில் உள்ள மாற்றங்கள், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதங்கள், நகை சந்தை, புவியியல் பதட்டங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் இது போன்ற பல காரணிகளால், தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


ALSO READ: Gold Rate Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR