Gold, Silver Rate Update, 30 July 2021: கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40,000-ஐத் தாண்டியது. எனினும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் ஏராளமான ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது. 


சென்னையைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு அருகிலேயே இருந்து வருகிறது. உலகளாவிய காரணங்கள், கொரோனா தொற்று  என பல காரணங்களால், தங்கத்தின் விலையில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. 


இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) ஒரு கிராமுக்கு ரூ.21 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம்  ரூ.4,562க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.168 அதிகரித்து ரூ.36,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளியும் (Silver Rate)  இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 73.20 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,200 என்ற விலையில் விற்பனையாகிறது. 


ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்


எம்.சி.எக்ஸில் (MCX) தங்க ஃப்யூச்சர்ஸ் இன்று சற்று சரிவுடன் துவங்கியது. தங்க ஃப்யூச்சர்ஸ் சுமார் ரூ .90 வீழ்ச்சியுடன் சுமார் 48200 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த முழு வாரமும் தங்க ஃப்யூச்சர்ஸ் சுமார் 750 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வார (ஜூலை 26-30) நிலவரம்


நாள் - தங்கம் (MCX ஆகஸ்ட் ஃப்யூச்சர்ஸ்)
திங்கள் -  47461/10 கிராம்
செவ்வாய் - 47573/10 கிராம்
புதன்கிழமை - 47577/10 கிராம்
வியாழக்கிழமை - 48281/10 கிராம்
வெள்ளிக்கிழமை - 48200/10 கிராம் (வர்த்தகம் நடைபெற்று வருகிறது)


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


ALSO READ: Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR