30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் ஏப்ரல் 29 அன்று அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார். கிரக இயக்கத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கும்ப ராசியில் சனியின் மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மறுபுறம், மீன ராசிக்கு ஏழரை நாட்டு சனி துவங்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியும் தொடங்கும். 


மகர ராசியின் ஏழரை நாட்டு சனி இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும். ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். இந்த வழியில், அவர் முழு சுழற்சியை செய்ய 30 ஆண்டுகள் ஆகும்.


இரண்டு கட்டங்களில் கும்பத்தின் நுழைவு


சனி இரண்டு கட்டங்களாக கும்ப ராசிக்குள் நுழைகிறது. முதலில், சனி பகவான் ஏப்ரல் 29 முதல் ஜூன் 4 வரை கும்ப ராசியிலும், ஜூன் 4 முதல் ஜூலை 12 வரை பிற்போக்கு இயக்கத்திலும் இருப்பார். ஜூலை 13-ம் தேதி சனி மகர ராசிக்கு திரும்புகிறார். அவர் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இந்த நாளில் இருந்து, சனி பகவான் மீண்டும் கும்ப ராசியில் பிரவேசித்து, மார்ச் 29, 2025 வரை அங்கு இருப்பார். 


மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 


சனி பகவானின் இந்த இயக்கத்தால் ராசிகளில் ஏற்படக்கூடும் விளைவுகளை இங்கே காணலாம்:


மேஷம்: பதவி, கௌரவம், புதிய வருமான ஆதாரங்களால் பலன்கள் உருவாகும்


ரிஷபம்: வாகனங்கள், சொத்து வாங்குவதால் மகிழ்ச்சி, போட்டித் தேர்வில் வெற்றி


மிதுனம்: சாதகமான இடமாற்ற யோகம், போராட்டத்திற்கு பின் வெற்றி


கடகம்: தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும்


சிம்மம்: பொருளாதார முன்னேற்றம், கூட்டுத் தொழிலில் லாபம்


கன்னி: வேலைக்கான யோகம், நிதி நெருக்கடிகள் நீங்கும்


துலாம்: நிலம், வாகன சுகம், குழந்தை பெறும் யோகம்


விருச்சிகம்: கிரக தொல்லைகள் அதிகரிக்கும், தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும்


தனுசு: அதிர்ஷ்டம் ஆதரிக்கும், நிதிநிலை வலுவாக இருக்கும்


மகரம்: செல்வம் பெருகும், கடனில் இருந்து விடுபடுவீர்கள்


கும்பம்: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் விலகும், பதவி உயர்வு யோகம்


மீனம்: மன உளைச்சல், போராட்டத்திற்கு பின் வெற்றி கிடைக்கும்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR