Canara வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு Good News; FD-க்கான வட்டி வீதம் உயர்வு..!
2 ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளைக் கொண்ட FD-க்களுக்கு, கனரா வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது..!
2 ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளைக் கொண்ட FD-க்களுக்கு, கனரா வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது..!
2021 பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ₹.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை கனரா வங்கி (Canara Bank) திருத்தியுள்ளது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கான வட்டியை வங்கி குறைத்துள்ளது. 2 ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளைக் கொண்ட FD-க்களுக்கு (fixed deposit), கனரா வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, முதிர்வு காலம் 7-45 நாட்களுக்குள் கால வைப்புத்தொகைக்கு, கனரா வங்கி 2.95% வட்டி விகிதத்தை வழங்கும். முதிர்வு காலம் 46-90 நாட்கள், 91 நாட்கள் முதல் 179 நாட்கள் மற்றும் 180 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான FD-க்களுக்கு, வங்கி முறையே 3.9, 4 மற்றும் 4.45% வட்டி விகிதங்களை வழங்கும்.
இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், ரிஸ்க் இல்லாத முதன்மையான முக்கிய முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் (fixed deposit) தான். ஏனெனில் முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒரு பாதுகாப்பான முதலீடாகும். fixed deposit திட்டங்களுக்கு வட்டி விகிதம் மிகக் குறைவாக உள்ளன. இதனால் தற்போதைய காலகட்டத்தில் பிக்ஸட் டெபாசிட் என்பது ஒரு ஆர்வமில்லாத முதலீடாக இருந்து வருகிறது. எனினும் கனரா வங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், fixed deposit-களுக்கு வட்டி விகிதத்தினை தற்போது கனரா வங்கி அதிகரித்துள்ளது.
ALSO READ | இனி Paytm மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - இங்கே செயல்முறை!
இந்த வட்டி விகிதம் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தினை மாற்றியமைக்காத நிலையிலும் கூட, இந்த வட்டி அதிகரிப்பு வந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
பொது மக்களுக்கான வட்டி விகிதம்
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
- 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
- 180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%
- 1 வருடத்திற்கு மட்டும் - 5.20%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.2%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.4%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.5%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 5.5%
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம்
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
- 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
- 180 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.95%
- 1 வருடத்திற்கு மட்டும் - 5.50%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.70%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.90%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 6%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 6%
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR