7th pay commission today news: 2010க்கு பின்னர் மத்திய அரசில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அது, அதற்கு முன்னதாக இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மிகவும் குறைவான சலுகைகள் கொடுப்பதாக இருந்தது. விரைவில் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) பலனைப் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்ட அமைச்சகத்தின் பதிலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் பதில் வந்த பிறகு, முடிவு எடுக்கப்படும்.  


டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு  பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 


இது தொடர்பாக, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை (Department of Pension and Pensioners' Welfare (DoP&PW)) இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல் அளித்தார்.


ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு!


நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த ஊழியர்களை புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை நிதிச் சேவைத் துறை (டிஎஃப்எஸ்) மற்றும் சட்ட அமைச்சகத்திடம் கருத்துக் கேட்டுள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. 


பலனடையும் ஊழியர்கள் 
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய அரசு இந்த விவகாரத்தை சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.


ஜனவரி 01, 2004க்கு முன் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட அந்த ஊழியர்களை NPS வரம்பிலிருந்து விலக்குவது குறித்து நிதிச் சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் (DoP&PW) சரியான முடிவை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார். ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் வழங்கலாம்.  


ALSO READ | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? ஜனவரியில் நல்ல செய்தி!!


CAPF ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது
சமீபத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய ஆயுதப்படை போலீஸ் படையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கும் யோசனை இல்லை என, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  ஜனவரி 1, 2004க்குப் பிறகு துணை ராணுவப் படையில் சேர்ந்த வீரர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்குமா, இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்றார்.


மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள் 1972ன் கீழ், துணை ராணுவ ஊழியர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை பெறுகின்றனர். அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (New Pension Scheme) தொடர்வார்கள் என்று தெரிவித்தார்.  


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைவான பலன்களே கிடைக்கின்றன
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள்  ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். 


ஞாயிற்றுக்கிழமையன்று, பல்வேறு துறைகளின் ஊழியர் அமைப்புகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து ஒரு வியூகத்தை உருவாக்கின. 2010க்கு பிறகு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணிநியமனம் செய்தது.  இந்த திட்டத்தில், பழைய திட்டத்தை விட ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சலுகைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் ஓய்வு  பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலத்தை புதிய ஓய்வூதிய திட்டம் பாதுகாக்காது என்பதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.


ALSO READ | 7th Pay Commission: சம்பளத்தில் 95,000 ரூபாய் அதிகரிப்பா! கணக்கீடு என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR