Indian Railways Latest Updates: மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான பயணங்களை வழங்குவதற்காக, அவர்களுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கைகள் மற்றும் குறிப்பாக, கீழ் படுக்கைகளில் முன்னுரிமையை இந்திய ரயில்வே வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படுக்கை வசதிக்கொண்ட வகுப்பில் நான்கு படுக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு மிடில் பெர்த்), 3 ஏசியில் இரண்டு படுக்கைகள் (ஒன்று கீழ் பெர்த் மற்றும் ஒரு மிடில் பெர்த்), 3இ வகுப்பில் இரண்டு படுக்கைகள் (ஒன்று கீழ் மற்றும் ஒன்று) ஆகியவை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு ஒதுக்கப்படும். என இந்திய ரயில்வே தனது மண்டலங்களுக்கு மார்ச் 31 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இருப்பினும், தனியாக அல்லது சிறு குழந்தைகளுடன் பயணம் செய்யும் வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு இந்த வசதி ஏற்கனவே உள்ளது என்பதை ரயில் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கரிப் ரத் ரயில்களில் என்னென்ன வசதிகள் உள்ளன?


கரிப் ரத் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு கீழ் பெர்த்களும், இரண்டு மேல் பெர்த்களும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிக்காக, அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது தவிர, ஏசி நாற்காலி வண்டியில் இரண்டு இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.


மேலும் படிக்க | Bharat Gaurav Special Train: காசிக்கு செல்ல அரிய வாய்ப்பு... புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் - 12 நாள்களுக்கும் முழு சேவை!


எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள்/பாராப்ளேஜிக் நபர்கள் மற்றும் எஸ்கார்ட் இல்லாமல் பயணிக்க முடியாத மனவளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்றவர்கள் மற்றும் முற்றிலும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் தனியாக அல்லது துணையுடன் பயணிக்கும் நான்கு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் சலுகைகளை ரயில்வே வழங்குகிறது.


சிறப்பு ரயில்கள்


முன்னதாக, இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், கோடை காலத்தில் கூடுதல் நெரிசலைக் குறைக்கவும், 217 சிறப்பு ரயில்களை இயக்கும். இந்த புதிய வசதி கோடை மாதங்களில் மட்டும் செயல்படும்.


குறிப்பாக, இந்த கோடைகால சிறப்பு கோடை ரயில்கள் ரயில் பாதைகள் வழியாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும். பாட்னா, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு, கோடைகால சிறப்பு ரயில்கள் தங்கள் பயணத்தை மிகவும் எளிதாக்கும்.


தென்மேற்கு ரயில்வே 69 சிறப்பு ரயில்களை இயக்குவதாகக் கூறியது, தெற்கு மத்திய பிரிவு 48 ரயில்களை அறிவித்துள்ளது. தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் ரயில் நிலையங்களில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகியவை அடங்கும். இதேபோல், மேற்கு ரயில்வே 40 சிறப்பு ரயில்களையும், தெற்கு ரயில்வே 20 சிறப்பு ரயில்களையும் அறிமுகப்படுத்தும். 


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இலவச உணவு... மூன்று வேளைக்கும் பெறலாம் - இதை மறக்காதீர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ