SBI Latest News: எஸ்பிஐ லைஃப் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. உங்கள் காலாவதியான எஸ்பிஐ லைஃப் (SBI Life Latest News) பாலிசியை நீங்கள் புதுப்பிக்க சிறந்த வாய்ப்பு உள்ளது என எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாமதமாக பிரீமியம் கட்டுவதால் ஏற்படும் அபராத தொகையிலிருந்து 100% வரை தள்ளுபடியையும் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. SBI Life பாலிஸியை பொறுத்தவரை 2 முதல் 3 வருட காலமாக புதுபிக்கப்பட்டாத காலாவதியான பாலிசிகளை,  புதிய சலுகை திட்டத்தின் கீழ் செப்டெம்ப்ர் 30ம் தேதி வரை புதுப்பிக்கப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணப்பிக்கும் முறை


SBI வழங்கும் இந்த சிறப்பு சலுகையின் கீழ், செப்டம்பர் 30 வரை, காலாவதியான உங்கள் SBI Life பாலிசியை மீண்டும் புதுப்பிக்க அரிய வாய்ப்பு உள்ளது. இதற்காக நீங்கள் https://mypolicy.sbilife.co.in/Campaign/RevivalQuotation.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் பாலிசி எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். மின்னஞ்சல் ஐடியை உள்ளிடுவதற்கான ஆப்ஷனும் உள்ளது. ஆனால், இமைல் ஐடி விபரங்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்குப் பிறகு, பணம் செலுத்துவதற்கான ஆப்ஷனையும் நீங்கள் காண்பீர்கள்.


ALSO READ | SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்..!!


எல்ஐசி (LIC) அளிக்கும் வாய்ப்பு


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் (Life Insurance Corporation of India-LIC) தனது வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான பாலிசியை புதுப்பிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. காப்பீட்டு நிறுவனம் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் அக்டோபர் 9 வரை காலாவதியாப பாலிசியை புதுபிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகையை பெற பிரீமியம் காலாவதியாகும் தேதி ஐந்து வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது தவிர, எல்ஐசியின் பாலிசிதாரர்களுக்கு அபராத கட்டண தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும்.


ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR