புதுடெல்லி:  அன்லாக்-5 அமலுக்கு வந்த பிறகு, நாட்டில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் இயல்பாகிவிட்ட நிலையில், இந்திய ரயில்வே சேவையும் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவைகளை தொடங்கிவிட்டது. சிறப்பு ரயில் சேவைகளுடன், மதத் தலங்களுக்கான ரயில் சேவைகளை மீட்டெடுக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், வைஷ்ணவ் தேவி பக்தர்களுக்கும் ரயில்வே ஒரு நல்ல செய்தியை கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நவராத்திரிக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை கலந்த்தாக அவர் தெரிவித்தார்.



இது குறித்து ட்வீட் செய்துள்ள சிங், 'டெல்லி-கத்ரா (வைஷ்ணோ தேவி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை மீட்டெடுக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் கலந்துரையாடினோம். நவராத்திரி பண்டிகையின்போது அன்னையை கண்டு அரும் பெற விரும்பும் பக்தர்களுக்காக இந்த சேவைகளை தொடங்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்களவை தொகுதியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மார்ச் மாதத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கப்படுகின்றன.


Read Also | Forbes India பணக்காரர்களின் பட்டியலில் 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR