Dangerous Apps: சமீபத்தில், பிளே ஸ்டோரில் இருந்த 19,300 செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவு திருடும் அபாயம் இருந்தது. அதனால்தான் அவை அகற்றப்பட்டன. மேலும் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்களை சிக்க வைக்க முடியும் மற்றும் மோசடிக்கு ஆளாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டது. இந்த செயலிகள் குறித்து கூகுள் (Google) மேற்கொண்ட விசாரணையில் ஆபத்து இருக்கிறது என தெரியவந்ததை அடுத்து, அந்த செயலிகளை கூகுள் தடை செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்ட்ராய்டு சாதனங்களில் (Android devices) ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பான ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் உங்கள் மொபைல் போன் மற்றும் கணினியை ஆபத்தில் சிக்க வைக்கும் சில செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவ்வப்போது பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை குறித்து கூகுள் விசாரிக்கும். அப்போது ஆபத்தான தீம்பொருள் சாப்ட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றிவிடுகிறது.


​​டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் சமீபத்திய தனது அறிக்கையில், 19,000-க்கும் மேற்பட்ட செயலிகளின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளது. இது தவறான உள்ளமைவுடன் இருப்பதால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படலாம் என எச்சரித்துள்ளது.


ALSO READ | இனி இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இயங்காது, முழு பட்டியல் இங்கே


பயர்பேஸ் தரவுத்தளம்:
பயனர்கள் பயன்படுத்தும் 19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளில் (Android apps) பயர்பேஸ் தரவுத்தளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அவாஸ்ட் கூறியது. பயர்பேஸ் என்பது பயனர் தரவை சேமிக்க ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். அதாவது பயர்பேஸ் (Firebase) என்பது கூகிள் மொபைல் மற்றும் வலை பயன்பாடுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.


பெயர், முகவரி, இருப்பிடத் தரவு மற்றும் சில சமயங்களில் கடவுச்சொற்கள் போன்றவற்றை ஆப் மூலம் சேகரிக்கப்பட்டு இருந்தால், அதாவது தனிப்பட்ட அடையாளம் எனக்கூறக்கூடிய நமது தகவல்கள் (PII) திருடப்படலாம் என கூகுள் நிறுவனத்துக்கு அவாஸ்ட் தெரிவித்தது.


தரவு திருட்டு எப்படி நடக்கும்: 
நீங்கள் பயன்படுத்தும் செயலில் உங்கள் தரவு, பெயர்கள், பிறந்த தேதி, முகவரிகள், தொலைபேசி எண்கள், இருப்பிடத் தகவல் உட்பட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்படுகிறது. ஒருவேளை ஆப் டெவலப்பர் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உங்கள் கடவுச்சொற்கள் உட்பட அனைத்து தரவுகளும் திருடப்படலாம். 


ALSO READ | Google News Showcase, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR