கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 1927 ஆம் அண்டு மார்ச் 6 ம் தேதி கொலம்பியாவின் அரக்காடாகாவில் கேப்ரியல் எலிஜியோ கார்சியா மற்றும் லூயிசா சாண்டியாகா மார்க்வெஸ் இகுயரன் ஆகியோருக்கு பிறந்தார். இவர் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20-ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். இவர் பத்திரிகையாளராகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 


ஏப்ரல் 2014 இல் கார்சியா மார்க்கேஸ் மரணத்தின் போது இறங்கற் குறிப்பு வெளியிட்ட கொலம்பியாவின் ஜனாதிபதி ஜுவான் மானுவல் சாண்டோஸ் அவரை "இதுவரை வாழ்ந்த கொலம்பியர்களில் மிகச் சிறந்தவர்” என வருணித்தார்.


982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது. இவரது பல சிறுகதைகளும் சில குறுநாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 


1999 ஆம் ஆண்டில், கபிரியேல் கார்சியா மார்க்கேசுக்கு நிணநீர் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனையால் வழங்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையால் வெற்றிகரமாக நோய் அது சரிசெய்யப்பட்டது. 


ஏப்ரல் 2014 இல், கார்சியா மார்கஸ் மெக்ஸிகோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நுரையீரல்களில் மற்றும் சிறுநீர் பாதையிலும் நோய்த்தொற்று ஏற்பட்டது. மேலும் நீர்ச்சத்து குறைபாடு நோயாலும் அவதிப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 


உலகின் நன்கு அறியப்பட்ட பிரபல நாலாராசிரியர் , சிறுகதை எழுத்தாளர் பத்திரிக்கையாளர் கபோ என பரவாக அறியப்பட்ட கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது 87வது வயதில் 17ம் திகதி ஏப்ரல் மாதம் 2014 மரணமடைந்தார்.


இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் அதன் டூடுல் வெளியிட்டுள்ளது.