ராபர்ட் கோக்கின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

ராபர்ட் கோக் 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார்.
ராபர்ட் கோக் 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார்.
ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். ஆண்டிற்குப் பிறகு பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக அவர் செயலாற்றினார்.
1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.
காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்தார் ராபர்ட் கோக்.
இந்நிலையில் இன்று அவரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை கூகுள் ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டு உள்ளது.