காதலர் தினம் 2023: உலகம் முழுவதும் இன்று, அதாவது பிப்ரவரி 14 அன்று காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. கூகுள் கூட தங்கள் வருடாந்திர கூகுள் டூடுல் மூலம் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது. காதலர் தினம் காதல் உணர்வை வெளிப்படுத்தி, அன்பு பாசத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையிலான தினமாக கொண்டாடப்படுகிறது, கூகுள் டூடுலும் மழைத்துளிகள் ஒன்றிணைந்து இதயத்தை உருவாக்கும் அற்புதமான அனிமேஷன் மூலம் காதலர் தினத்தை சிறப்பித்துள்ளது. காதலர்கள் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வதுடன், வாழ்க்கையில் அனைத்து நிலையிலும் ஒன்றாக இருப்போம் என்ற உறுதிமொழியுடன் ஒரு காதல் பிணைப்பை உருவாக்குவதை சித்தரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலர் தினத்தை கூகுள் டூடுல் கொண்டாடுகிறது. காதலர் தினத்தில்  கூகுள் டூடுலின் அதிகாரபூர்வ பக்கம் பிப்ரவரி 14, செவ்வாய்கிழமை அன்று ஒரு , "மழையோ அல்லது வெயியோ, நீ எப்போதும் என்னுடையதாக இருப்பாயா." என தகவலை பகிர்ந்து கொண்டது. தம்பதிகள் காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் மேலும் சேர்க்கப்பட்டது, "இன்றைய காதலர் தினம் டூடுல் இந்த ஆண்டின் காதலர் தினத்தை கொண்டாடுகிறது, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் காதல் துணைக்கு பரிசுகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றின் மூலம்  அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் காதலர்கள் மட்டுமல்லாது நண்பர்களிடமும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்."


மேலும் படிக்க | காதலர் தினம்: மறந்தும் ‘இவற்றை’ பரிசாக கொடுக்காதீங்க... காதல் உறவு பாதிக்கும்!


கூகுள் டூடுல் பக்கம் காதலர் தினத்துடன் தொடர்புடைய பல்வேறு புனைவுகளைப் பற்றியும் பேசுகிறது. "இடைக்காலத்தில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் பிப்ரவரி 14 பறவைகளின் இனச்சேர்க்கையின் ஆரம்பம் என்று நம்பியது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இந்த நிகழ்வை அன்புடன் தொடர்புபடுத்தி, விரைவில் காதல் கொண்டாட்டங்களைத் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது. காதலர் தின வாழ்த்துக்கள்" என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று வருகிறது. நவீன காலத்தில், இது வணிகமயமாக்கப்பட்ட திருவிழாவாக மாறியுள்ளது, இதில் காதலர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில், பரிசுகள் மற்றும் சில தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுகிறார்கள். தம்பதிகள் குறிப்பாக ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த இந்த தினத்தை கொண்டாடுகிறார்கள். அழகான பரிசுகளை பரிமாறிக்கொள்வதில் இருந்து மெழுகுவர்த்தி ஏற்றி இரவு விருந்தை ஒன்றாக அருந்துதல் மற்றும் காதல் பயணங்கள் வரை,  அனபையும் பாராட்டையும் தெரிவிக்க வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்.


மேலும் படிக்க | Happy Kiss Day 2023: காதலர்களுக்கான சிறந்த பரிசு மலரா முத்தமா அரவணைப்பா?


மேலும் படிக்க | காதலர் தினத்தில் எப்படி புரபோசஸ் செய்யலாம்? உங்களுக்கான சில ஐடியாகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ