2019 உலக கோப்பை தொடரினை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது வலைதள முகப்பில் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று முதல் துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட பத்து அணிகள் பங்கேற்கிறது.


இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டும், மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டும் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.


ஜூன் 5 ஆம் தேதி உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கும். முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கொள்கிறது இந்திய அணி. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 ஆம் நாள் நடைபெறவுள்ளது. 


இது உலக கோப்பை தொடர் ரவுண்ட் சுற்று ராபின் வடிவமைப்பில் விளையாடப்படுகிறது. இதில் அனைத்து அணிகளும் ஒருவரோடு ஒருவர் மோதுவார்கள். இதில் வெற்றி பெரும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.


இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது.


இந்நிலையில் அதற்காக கூகுள் நிறுவனம் தனது வலைதள முகப்பில் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் இந்த உலக கோப்பை தொடரினை சிறப்பிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு சிறிய GIF வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.