வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி... 3 மாதங்களுக்கு EMI விலக்கு அறிவித்த அரசு வங்கிகள்..
நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, வங்கிகள் செவ்வாயன்று வாடிக்கையாளர்களுக்கு EMI ஒத்திவைப்பதன் பயனை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அறிவித்தன
புது தில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் நாடு தழுவிய லாக்-டவுன் உத்தரவை அடுத்து, வங்கிகளில் கடன் வாங்கி மாததோறும் தவணை முறையில் கட்டி வரும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தி கொண்டு சில அரசு வங்கிகள் பெரும் நிவாரணம் அளித்துள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த வேண்டியதில்லை என்று கடன் வாங்கியவர்களின் ஈ.எம்.ஐ யை மூன்று மாதங்களுக்கு வங்கிகள் ஒத்திவைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, ரிசர்வ் வங்கி சில்லறை மற்றும் பயிர் கடன்கள் உட்பட அனைத்து கால கடன்கள் மற்றும் பணி மூலதன கொடுப்பனவுகளுக்கு மூன்று மாத கால அவகாசம் அறிவித்தது. அதனையடுத்து இந்த வங்கிகள் கடன் தவனைகளை மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. எந்ததெந்த வங்கிகள் அறிவித்துள்ளது என்று பார்ப்போம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பிஎன்பி(PNB) ட்வீட் செய்துள்ளது, அதில் "பி.என்.பி தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை அனைத்து தவணை கால கடன்கள் மற்றும் ரொக்க கடன் வசதிக்கான வட்டி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா:
எஸ்பிஐ (SBI) ட்வீட் செய்ததாவது, "கோவிட் -19 (COVID-19) தாக்கத்தை கருத்தில் கொண்டு, 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை மூன்று மாதங்களுக்கு செலுத்தப்பட்ட ஈஎம்ஐ ஒத்திவைக்க எஸ்பிஐ (SBI) நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை செலுத்தப்பட்ட மூலதன வசதிகளுக்கான வட்டி 2020 ஜூன் 30 வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா:
அதே நேரத்தில், பாங்க் ஆப் பரோடா ட்வீட் செய்ததாவது, "ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலை அடுத்து, பாங்க் ஆப் பரோடா வங்கி, கார்ப்பரேட் கடன், எம்.எஸ்.எம்.இ (MSME), வேளாண் கடன், சில்லறை விற்பனை கடன், வீடு மற்றும் வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் உட்பட அனைத்து கடன்களின் தவணையும் , மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை என மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா:
யூனியன் பாங்க் ஆப் இந்தியா ட்வீட் செய்ததாவது, “நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 அச்சுறுத்தலை சமாளிக்க நிவாரணத்தின் பயனை வழங்க உள்ளோம். மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு கடன் தவணை / வட்டியை செலுத்த வேண்டியதில்லை.
கனரா வங்கி:
கனரா வங்கி ட்வீட் செய்துள்ளது, அதில் "ரிசர்வ் வங்கி தொகுப்பின் கீழ், கடன் வாங்கியவர்கள் தங்கள் ஈ.எம்.ஐ.யை 2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரை மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது."
கார்ப்பரேஷன் வங்கி:
கார்ப்பரேஷன் வங்கியும் ட்வீட் செய்துள்ளது, "கடன் வாங்கியவர் தனது ஈ.எம்.ஐ-யை (EMI) மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடன் தவணை கழிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இதற்காக உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வங்கிகளைத் தவிர, இந்தியன் வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவையும் கடன் தவணைக்கு தடை விதிக்க முன்வந்துள்ளன.