முந்துங்கள்; 50 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இலவசமாக பெற அரிய வாய்ப்பு
Petrol-Diesel: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு நிம்மதியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: Petrol-Diesel Prices Update: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அனைத்து இடங்களிலும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. கலால் வரி குறைக்கப்பட்ட பிறகும் பெட்ரோல்-டீசல் விலை விண்ணை தொடுகிறது. ஆனால் இதற்கிடையில் சாமானியர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 50 லிட்டர் பெட்ரோல் டீசல் இலவசமாக கிடைக்கும் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே விரிவாக காண்போம்.
ஆண்டுக்கு 50 லிட்டர் வரை எரிபொருள் இலவசம்
உண்மையில், நீங்கள் இந்தியன் ஆயில் HDFC வங்கி கிரெடிட் கார்டு (IndianOil HDFC Bank Credit Card) மூலம் பெரிய சலுகையை பெறலாம். இந்த கிரெடிட் கார்டு மூலம் ஐஓசிஎல் அவுட்லெட்களில் 'Fuel Points' வடிவில் வெகுமதி புள்ளிகளைப் பெறுவீர்கள். இந்த கார்டு மூலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் (Petrol Diesel) பம்பில் பணம் செலுத்தினால், 5% எரிபொருள் புள்ளிகள் கிடைக்கும். மேலும் சிறப்பு என்னவென்றால், இந்த எரிபொருள் புள்ளிகளை மீட்டெடுப்பதன் மூலம், நீங்கள் ஆண்டுக்கு 50 லிட்டர் எரிபொருளைப் பெறலாம்.
ALSO READ | கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அவசியமா?
கார்டின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்
* இந்த கார்டு மூலம் எரிபொருளை வாங்கும் போது, நீங்கள் செலவழிக்கும் பணத்தில் 5 சதவீதத்தை எரிபொருள் புள்ளிகளாகப் பெறுவீர்கள்.
* முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 50 எரிபொருள் புள்ளிகளைப் பெறுவீர்கள்.
* இருப்பினும், 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் அதிகபட்சமாக 150 எரிபொருள் புள்ளிகளைப் பெறலாம்.
* இந்த கார்டு மூலம் மளிகை மற்றும் பில் செலுத்தும் போதும் 5 சதவீத எரிபொருள் புள்ளிகளைப் பெறுவீர்கள்.
* அதாவது, இந்த இரண்டு வகைகளிலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 100 எரிபொருள் புள்ளிகளைப் பெறலாம்.
* பெட்ரோல் பம்புகளில், இந்தக் கார்டு மூலம் குறைந்தபட்சம் ரூ.400க்கு எரிபொருள் வாங்கினால், 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
* ஒரு பில்லிங் சுழற்சியில் அதிகபட்சமாக ரூ.250 வரை எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படலாம்.
இந்த காரடுக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.500 மட்டுமே. நீங்களும் இந்த கிரெடிட் கார்டை எடுக்க விரும்பினால், HDFC வங்கியின் hdfcbank.com என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
ALSO READ:LPG CNG Prices Hike: உயர்கிறது CNG மற்றும் PNG விலை; வெளியான அதிர்ச்சித் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR