Indian Railways Rule For Women: ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதன்மூலம், ரயில்வே துறை பொருளாதாரத்திற்கும் பல்வேறு பங்களிப்பை அளிக்கின்றன. இந்திய ரயில்வே துறையால், பயணிகளுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் முதல் பெண்கள் வரை பல சிறப்பு வசதிகளை இந்திய ரயில்வே வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என விதியும் உள்ளது. இதேபோன்று, கொரோனா காலகட்டத்திற்கு முன், மூத்த குடிமக்களுக்கும் கட்டண சலுகையின் பலனை ரயில்வே வழங்கியது.


மேலும் படிக்க | Indian Railways மிகப்பெரிய அப்டேட்: மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை


பெண்கள் புகார் அளிக்கலாம்


ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணம் செய்யும் பெண்ணிடம் டிக்கெட் இல்லை என்றால், ரயிலில் இருந்து இறக்க முடியாது. பல நேரங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவல நிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் பல நேரங்களில் காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறக்க முடியாது.


இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ரயில்வே பெண்களுக்கு ஆதரவான பல விதிகளை வகுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ஒரு பெண் அல்லது குழந்தை தனியாக டிக்கெட் இல்லாமல் இரவில் ரயிலில் பயணம் செய்தால், டிக்கெட் பரிசோதகர் அவரை ரயிலில் இருந்து இறக்க முடியாது. மாறாக பெண்களை பயணியை அவர் கீழே இறக்கிவிட்டார் எனில், சம்பந்தப்பட்ட பெண் ரயில்வே ஆணையத்திடம் பரிசோதகருக்கு எதிராக புகார் செய்யலாம்.


ரயில்வேயின் உரிமைகள் என்ன தெரியுமா?


இந்திய ரயில்வேயில், பெண்கள் பயணிகளுக்கு பல உரிமைகளை வழங்குகிறார்கள். இதன் மூலம் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க முடியும். இரயில் பயணத்தின் போது பயணிகள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எழுப்பி டிக்கெட்டை சரிபார்த்து டிக்கெட்டை காட்ட டிக்கெட் பரிசோதகர் கோர முடியாது என்பது ரயில்வேயின் மற்றொரு விதி. ரயில்வே விதிகளின்படி, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பயணிகள் நிம்மதியாக தூங்கலாம். ஆனால் இரவில் ரயிலில் ஏறும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது.


ஏறத்தாழ அனைத்து நீண்ட தூர ரயில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் இப்போது இந்த பிரச்சனை ஏற்படாது என கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் உங்கள் ரயிலைத் தவறவிட்டு அதன் அடுத்த நிறுத்தத்தை கார் அல்லது பைக்கில் அடைந்தாலும், டிக்கெட் பரிசோதகர் உங்கள் காலியான இருக்கையை யாருக்கும் கொடுக்க முடியாது. இது அடுத்த 2 நிலையங்கள் வரை பொருந்தும். 


ரயில்வேயின் இந்த பெண்களுக்கு பயனிளக்க கூடிய விதிகளை பயன்படுத்தி, பாதுகாப்பான ரயில் பயணத்தை அவர்கள் மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, கொரோனா தொற்றுக்கு முன்னர் வரை, ரயில்களில் பயணிப்பதற்கு மூத்த குடிமக்களிடம் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை கொரோனா தொற்று காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. 


மத்திய அரசு விரைவில் அதனை மீண்டும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதச் சலுகையும் வழங்கியது வந்தது.


மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவரை பயணம் செய்ய வைப்பது எப்படி தெரியுமா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ