இனி குரூப்-1 தேர்வு இறுதி முடிவுகள் 10 மாதங்களில் வெளியிடப்படும் :டிஎன்பிஎஸ்சி
இனி குரூப்-1 தேர்வு முடிவுகளின் இறுதி பட்டியல் 10 மாதங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இனி குரூப்-1 தேர்வு முடிவுகளின் இறுதி பட்டியல் 10 மாதங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளில் மொத்தம் 4602 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் ஓராண்டுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் செய்வது மிகுந்த கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறிவந்தன.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், "குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். வேலைக்கான அறிவிப்பு வெளியாகி பின்னர் முதல் இரண்டு மாதத்தில் முதல்நிலை தேர்வு நடைபெறும். அடுத்த இரண்டு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறினார்.