நல்ல அடர்த்தியான முடி வேண்டுமா? செலவே இல்லாத எளிய வீட்டு குறிப்புகள் இதோ!
Healthy And Thick Hair: முடி உதிர்வு பிரச்சனையை எண்ணி அதிக கவலை உள்ளதா? தினசரி எளிய வீட்டு பராமரிப்புகள் மூலம் நீளமான மற்றும் அடர்த்தியான முடியை பெற முடியும்.
Healthy And Thick Hair: இன்றைய சூழலில் பலருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. முடி கொட்டும் பிரச்சனையை தாண்டி இளம் வயதிலேயே நரை முடி, பொடுகு தொல்லையும் பலருக்கு உள்ளது. அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான முடியை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முடி தான் ஒருவருக்கு கூடுதல் அழகை கொடுக்கிறது. தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான முடியவை பராமரிப்பது சவாலான ஒரு விஷயம். ஒருசிலருக்கு மரபு ரீதியாக நீளமான முடி இருக்கும். ஆனாலும் பலருக்கும் ஆரோக்கியமான, பளபளப்பான முடியை பெற சிறந்த முடி பராமரிப்பு அவசியம். உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள், வயது காரணமாக அல்லது அதிக மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்
இந்நிலையில் முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அடர்த்தியை மற்றும் பளபளப்பான முடியை பெறவும் பல செயற்கை தயாரிப்புகளை பயன்படுகின்றனர். ஆனால் இது அனைவருக்கும் சிறந்த தீர்வை கொடுப்பதில்லை. தினசரி உணவில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வதன் மூலம் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். முடிக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் நல்ல அடர்த்தியான முடியை பெற முடியும். எனவே சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் இழந்த முடியை மீண்டும் பெற முடியும்.
முடி ஆரோக்கியம்
ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை பெற நல்ல உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். முடிக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் மீன், நட்ஸ், பச்சை காய்கறிகள் போன்ற அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இரும்பு, வைட்டமின் டி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் முடியை உள்ளிருந்து ஊட்டமளிக்கும். இதன் காரணமாக முடி உதிர்வது நிற்கிறது. இதுதவிர பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் கொண்ட சீரான உணவை எடுத்து கொள்வது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் நீரேற்றம்
முடி உதிர்விற்கு முதன்மையான காரணம் நீர் சத்து இல்லாதது. முடியின் வேர்கள் சத்தாக இல்லை என்றால் முடி உதிரும். ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை பெற தலையை நன்கு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் உடல் நல்ல நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சில ஆயுர்வேத எண்ணெய்கள் முடிக்கு நீரேற்றத்தை அளித்து இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை நம்மால் அதிகரிக்க முடியும்.
மென்மையான முடி
உங்களுக்கு மரபணு ரீதியாக நல்ல முடி இருந்தால் அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். இயற்கையாகவே நல்ல அடர்த்தியான முடி இருந்தாலும் சரியான பராமரிப்பு இல்லாத போது முடி உதிர்தல் மற்றும் உடையும் பிரச்சனை ஏற்படுகிறது. எப்போதும் தலைக்கு குளித்த பிறகு பெரிய பற்கள் கொண்ட சீப்பை கொண்டு முடியை சீவுங்கள். அதேபோல முடியில் உள்ள ஈரத்தை போக்க மிருதுவான துணிகளை பயன்படுத்தவும். முடிக்கு ஹீட்டர் மற்றும் ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
இயற்கை எண்ணெய்
தினசரி முடிக்கு ஷாம்பு அல்லது கண்டிஷனர் போடுவது தலையில் உள்ள இயற்கை எண்ணெய்யை அகற்றிவிடும். இதன் மூலம் முடி வலுவடைந்து உடையும் தன்மையை அடையும். எப்போதும் முடிக்கும் சல்பேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தவும், இது தலையில் உள்ள இயற்கையான எண்ணெயை அகற்றாது. மேலும் வலுவான முடியை பெறவும், பிளவு முனைகளை அகற்றவும், முடி உடைவதைத் தடுக்கவும் அடிக்கடி முடியை வெட்டுவதும் அவசியம். இது உங்கள் முடியை வலுவாக வளர அனுமதிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ