ஐக்கிய நாட்டை சேர்ந்த இரண்டு தம்பதிகள், Halloween பண்டிகை அன்று செய்யப்பட்ட சாக்லெட்டினை உண்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Halloween என்பது மற்றவர்களை பயமுறுத்தி விளையாடும் நாளாகும். ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புடைய இந்த நாளில் மக்கள் இவ்விரு வண்ணங்களில் போலியான பொருட்களை உருவாக்கி பிறரை ஏமாற்றுவதும் வழக்கம். 


அந்த வகையில் ஒட்டும் பசைகளை கொண்டு உருவாக்கப்பட்ட போலியான சாக்லேட்டுகளை உண்ட ஐக்கிய நாட்டு தம்பதியிர், உண்ட சாக்லேட் ஜீரனிக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த தம்பதியரின் இந்த உவாதை நிலைக்கு காரணம் ஆரம்பத்தில் தெரியவில்லை. சுயநினைவின்றி வீட்டில் மயங்கி இருந்தவர்களை அண்டை வீட்டார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,. மருத்துவபரிசோதனையில் இந்த போலி சாக்லேட் மர்மம் வெளியாகியுள்ளது.


பின்னர் அறுவை சிகிச்சை உதவியால் இத்தம்பதியரின் வயிற்றில் இருந்து போலி சாக்லேட்கள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்கானிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இத்தம்பதியர் விரைவில் பூரண குணமடைவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் வேடிக்கை என்னவென்றால், பாதிக்கப்ட்ட தம்பதியரின் இரண்டு குழந்தைகளும் இந்த சாக்லெட்டுகளை உண்டுள்ளனர். ஆனால் இந்த சாக்லேட் குழந்தைகளை ஒன்றும் செய்யவில்லையாம்...