வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று 379-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என பல பெருமைகளை கொண்டது சென்னை. இது, 1996 ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியின்போதும், சென்னை முக்கிய இடம் வகித்துள்ளது. 


இத்தகைய பெருமைக்குரிய சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று புனித ஜார்ஜ் கோட்டை. கிழக்கிந்திய கம்பெனியின் தென்மண்டல வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோரின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் வாங்கப்பட்டதுதான், இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை. தற்போது தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சட்டமன்றம் அமைந்திருக்கும் இடமாகவும், தலைமைச் செயலகமாகவும் இருந்து வருகிறது. 


சென்னையின் மிகப் பழமைமிகு அடையாளங்களில் ஒன்றாக எழும்பூர் அருங்காட்சியகம் திகழ்கிறது.1851 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் இது. இங்கு தொல்லியல், நாணயவியல், பண்டையக் காலச் சிலைகள், படிமங்கள், போன்ற சேகரிப்புகள் அரிதானவை. 


சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்துக்கு மாற்றாக, 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம், ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையமாகும். ஒரு நாளைக்கு 4,800 பேருந்துகள் வரை இந்த நிலையத்துக்கு வந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பேர்வ ரை இதனைப் பயன்படுத்துகிறார்கள்.


சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் மற்றொன்று மெரினா கடற்கரை. 13 கி.மீ.  நீளம் கொண்ட இந்த கடற்கரையே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மணற்பாங்கான இந்த அழகிய கடற்கரை சென்னை மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ளது. 


இப்பகுதியில்தான் கலங்கரை விளக்கம், அண்ணா சமாதி, மற்றும் நினைவகம், எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதி, உழைப்பாளர் சிலை மற்றும் நினைவில் நீங்காத இடம் பிடித்த பலரின் சிலைகள் உள்ளன.


சிங்கார சென்னையை புகழ்ந்து திரையுலகில் பல திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் மூலமும் வந்தாரை வாழவைக்கும் சென்னையை புகழ்ந்துள்ளனர்..!