புதுடெல்லி: சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் எல்பிஜி சிலிண்டர்களை எங்கிருந்து வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அரசாங்கம் ஒரு அருமையான வசதியை வழங்கப் போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனிமேல் நீங்களே உங்கள் சொந்த எல்.பி.ஜி விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கலாம், அந்த நிறுவனத்திடமே உங்கள் எல்பிஜி சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம். எல்பிஜி நிரப்பலின் பெயர்வுத்திறன் திட்டம் குறித்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, எல்பிஜி நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான விநியோகஸ்தரை தேர்வு செய்யலாம்.


நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி, அனைவருக்கும் மலிவான எரிசக்தியை அணுகக்கூடியதாக மாற்றவேண்டும் என்று அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Also Read | LPG சிலிண்டர் முன்பதிவில் ₹900 சேமிக்கலாம்; Paytm வழங்கும் அசத்தல் சலுகை


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செயல்படும் அரசு,  நுகர்வோர், தங்கள் விநியோகஸ்தரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.


செயல்திறனின் அடிப்படையில் விநியோகஸ்தர் தேர்ந்தெடுக்கப்படலாம். எல்பிஜி சிலிண்டரை நிரப்புவதற்கான மொபைல் செயலி / வாடிக்கையாளர் போர்ட்டலில் திறந்து நுகர்வோர் உள்நுழையவேண்டும். அங்கு, எல்.பி.ஜி விநியோகஸ்தர்களின் முழுமையான பட்டியல் இருக்கும்.


அதில், செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு இருக்கும். இது சிறந்த விநியோகஸ்தர்களைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளருக்கு உதவுகிறது. இது விநியோகஸ்தர்கள், சேவையை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தும்.  


Also Read | LPG மானியம் தவறுதலாக கைவிட்டுப் போனதா? மீண்டும் சுலபமாக பெறலாம்


நுகர்வோருக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும்
வாடிக்கையாளர் இந்த பட்டியலிலிருந்து எந்தவொரு விநியோகஸ்தரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையைப் பெறுவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளையும் விநியோகஸ்தர்களிடையே தொடங்குவார்கள். இது சேவையை மேம்படுத்துவதோடு, அவர்களின் மதிப்பீட்டை மேம்படுத்தும். 


இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்கள் இருவரும் பயனடைவார்கள் என்று அமைச்சர் கூறினார். சண்டிகர், கோயம்புத்தூர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய 5 இடங்களில் பைலட் திட்டமாக இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது.  
 
முன்பதிவு செய்த ஒரே நாளில் நுகர்வோருக்கு சிலிண்டர்களை வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) ஏதேனும் திட்டம் தயாரிக்கிறதா என்றும் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது. இது குறித்து, தற்போது அவர்களிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.


Also Read | சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய ஆதார், முகவரி சான்று தேவையில்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR