காதலர் தினம் இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. காதலர்கள் தற்போது காதலர் வாரத்தை கொண்டாடி வருகின்றனர். காதல் என்றாலே அன்பு, பாசம், அர்ப்பணிப்பு, உறுதி, நம்பிக்கை, தோழமை... இவை அனைத்தின் சங்கமம்தான். காதலர் வாரத்தின் ஐந்தாவது நாளான ‘ப்ராமிஸ் டே’-வில், காதலர்கள் நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும் உறுதியை அளித்துக்கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலர் வாரத்தின் ஐந்தாவது நாளில் வரும் ப்ராமிஸ் டே, காதலர் வாரத்தின் மிக முக்கியமான மற்றும் மறக்கமுடியாத நாளாகும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலர்கள், தங்கள் காதலன் / காதலியுடன் நீண்டகாலத்திற்கு காதலுடன் கூடிய நல்லுறவில் இருப்போம் என்ற உறுதியை அளிக்கிறார்கள். உறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையையும் காதலர்கள் ஏற்படுத்த வேண்டும். 


இந்த காதல் வாரத்தில் மிகவும் முக்கியமான நாளான ப்ரமிஸ் டே-வில், எந்த வித சூழ்நிலையிலும் பிரியாமல் இருக்கும் உறுதியை காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் அளித்துக்கொள்கிறார்கள். 


‘ப்ராமிஸ் டே’-வில் உங்கள் காதலன் / காதலிக்கு அனுப்ப அன்பு கலந்த காதல் வரிகள் இதோ: 


1. அன்புக்கு நேர்மை மற்றும் நம்பிக்கை இருந்தால் போதும். கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இங்கு இடம் இல்லை. ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!!


2. வாழ்க்கை முடியும் வரை நாம் ஒன்றாக பயணிப்போம் என நான் உறுதியளிக்கிறேன். ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!!


3. உன்னை எப்போதும் ராணி போல் நடத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். என் இதயம் உன் ராஜ்ஜியம், உன் விருப்பம் என் கட்டளை. ஹேப்பி ‘ப்ராமிஸ் டே’!!


மேலும் படிக்க | Teddy day: காதலர் வாரத்தில் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் ‘டெடி டே’ 


4. என் கையைப் பிடித்துக்கொள்..... நான் உன்னை ஒருபோதும் விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!! 


5. இந்த ‘ப்ராமிஸ் டே’-வில், உனக்கு தேவை ஏற்படும்போதெல்லாம், உன் அருகில் நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஹேப்பி ‘ப்ராமிஸ் டே’...ஸ்வீட்ஹார்ட்!!


6. என்ன கஷ்டம் வந்தாலும், நான் உன்னை விட்டு விலக மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள், அன்பே!


7. நான் உன்னை ஒருபோதும் வருத்தப்படுத்த விட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!!


8. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நான் உன்னுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்... இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!! 


9. சுவாசிக்க காற்று தேவை போல, நான் வாழ நீ தேவை.. கண்ணின் இமையாய் என்றும் உன்னுடன் இருப்பேன்.. இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள் அன்பே!! 


10. தனிமை என்ற உணர்வை இனி நீ உணர மாட்டாய்... ஒவ்வொரு தருணமும் நிழலாய் நான் உன்னுடன் இருப்பேன்.. இனிய ‘ப்ராமிஸ் டே’ வாழ்த்துக்கள்!! 


மேலும் படிக்க | Chocolate Day 2023: காதலுக்கு மட்டுமல்ல அன்பான உறவுகளுக்கும் சாக்லெட் தின வாழ்த்துகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ