ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தினம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திமடைந்த பின்பு இந்தியாவிற்கு என தனி அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்த தினம் தான் குடியரசு தினம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1949 நவம்பர் 26 ஆம் தேதி முழுமையாக டிராஃப்ட் செய்யப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாள் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்படும். எனவே இந்த பதிவில் குடியரசு தின கவிதைகள், பொன்மொழிகள் மற்றும் தமிழ் குடியரசு தின வாழ்த்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 26 ஆம் தேதி அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து செய்திகள் பகிர்வதற்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | Republic Day 2024: குடியரசு தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?


சமத்துவம் தொடர்ந்து,
சம உரிமை நீடித்து,
பாரதம் செழித்து,
மக்கள் வாழ்வு சிறக்க,
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்


தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
வந்தேமாதரம்
குடியரசு தின வாழ்த்துக்கள்


எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


அடிமைப்பட்டு போன தாய் நாட்டை,
தன் இன் உயிரை துச்சம் என எண்ணி,
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த 
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்


இந்தியன் என்பது நம் பெருமை.
வேற்றுமையில் ஒற்றுமை
என்பது நம் மகிகை.
நம்மை பிரிந்து சிறுமை படுத்தும்
தீய சக்திகளை வேரருத்து,
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்


தேசபக்தி என்பது நாட்டின் அன்பு.
ஆனால், உங்கள் நாட்டு மக்களை நேசிக்காமல் நாட்டை நேசிக்க முடியாது
இதை நாம் எப்போதும் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
ஆனால், நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும்
பொதுவான நிலையைக் கண்டுபிடிக்க வேண்டும்
பொதுவான நன்மையைத் தொடர நம் வேறுபாடுகளுக்குக் குறுக்கே பாலங்களை உருவாக்க வேண்டும்.
குடியரசு தின வாழ்த்துகள்!


இந்த நாளில், உங்கள் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்,
நம் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
அது நம் அனைவருக்கும் இருக்கும் கடமை !!
நான் ஒரு இந்தியர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
குடியரசு தின வாழ்த்துகள்!


இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி விழிப்புணர்வு பெற உறுதியேற்போம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதிகள்! இனி இவர்களுக்கு மட்டும் தான் லோயர் பெர்த்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ