விநாயகருக்கு பிடித்த மலர் என்ன தெரியுமா? இது தோல் மற்றும் முடிக்கும் நல்லது!
Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இன்று விநாயகருக்கு நிறைய சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகளை படைத்து கொண்டாடுவார்கள். விநாயகருக்கு செம்பருத்தி பூ மிகவும் பிடித்தமான ஒன்றாகும். விநாயகருக்கு இந்த சிவப்பு மலர் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே மக்கள் அதை அவருக்கு வழங்க விரும்புகிறார்கள். இந்த செம்பருத்திப் பூ நம் தலைமுடி மற்றும் சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. ஏனெனில் அதில் பல பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. நீங்கள் அதை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்!
மேலும் படிக்க | உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்
ஃபேஸ் பேக்
செம்பருத்தி பூக்கள் உங்கள் சருமத்தை பளபளக்க உதவும். இவற்றை வைத்து பேஸ் பேக் தயாரிக்க, இந்த பூக்களை நசுக்கி, சிறிது தயிர் அல்லது தேனுடன் கலந்து பேஸ் பேக் உருவாக்க வேண்டும். இந்த பேஸ் பேக் உங்கள் முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும், பின்னர் சாதாரண தண்ணீரில் நன்கு கழுவவும். இது உங்கள் சருமம் நன்றாகவும் மென்மையாகவும் இருக்க உதவும். செம்பருத்திப் பூக்களை அரைத்து, ரோஸ் வாட்டரில் கலந்தும் பயன்படுத்தலாம். மேலும் இதனை வைத்து டோனரும் செய்யலாம். டோனர் என்பது உங்கள் முகத்தை சுத்தம் செய்து, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் உணர உதவும் ஒரு திரவமாகும். இது அழுக்குகளை அகற்றி மென்மையாக்க உதவுகிறது. செம்பருத்திப் பூக்களைக் கொண்டு டோனர் செய்ய பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் உங்கள் தோலில் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு ஒரு சிறப்பு ஸ்மூத்தி போன்றது. உடல் வலுவாக இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி சாப்பிடுகிறீர்களோ, அதுபோலவே உங்கள் தலைமுடி மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். இது முடி வறட்சியை சரிசெய்ய உதவுகிறது மற்றும் உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றுகிறது. உங்கள் தலைமுடியை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற, செம்பருத்திப் பூக்களைப் பயன்படுத்தலாம். முதலில் பூக்களை நசுக்கி, தேங்காய் எண்ணெய் அல்லது தயிருடன் கலக்க வேண்டும். பின்னர், இந்த கலவையை உங்கள் தலை மற்றும் முடியில் வைத்து, சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும்!
அதே போல ஹேர் வாஸிலும் செம்பருத்தி பூக்களை பயன்படுத்தலாம். பலரும் முடியை சுத்தமாக வைத்து கொள்ள ஷாம்பூவை பயன்படுத்துவது வழக்கம். இது தலைமுடியில் அழுக்கு மற்றும் கிருமிகளை அகற்ற உதவும். ஷாம்பு போட்டு குளித்த பின்னர் உங்கள் தலைமுடி புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கும். ஷாம்புவிற்கு பதில் தலைமுடி பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருக்க செம்பருத்திப் பூக்களை பயன்படுத்தலாம். இதற்கு பூக்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, ஆறவிடவும். பின்னர் இதனை உங்கள் முடிக்கு தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை அழகாகவும், உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைவான கலோரி கொண்ட சுவையான காலை உணவு ரெஸிபிகள்
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ