நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்ககவைத்துக்கொண்டவர் நடிகர் சூர்யா. இவர் திரையுலகில் மட்டும் ஹீரோ இல்லை. நிஜ வாழகியிலும் ஹீரோ தான். இவர் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


பொது மக்களுக்கு சேவை செய்வதில் இவர் நிஜ வாழ்வியல் ஹீரோவாக திகழ்கிறார். கல்வியை ஒரு எட்டக் கனியாக நினைத்து ஏங்கும் திறமையான ஏழை மாணவ, மாணவிகளுக்காக சூர்யா உருவாக்கிய அமைப்புதான் அகரம் அறக்கட்டளை. இந்த அமைப்பு வழியே ஒவ்வொரு ஆண்டும், மாவட்டம் தோறும் தனது அகரம் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள், தன்னார்வளர்களை அந்தந்தப் பகுதிகளுக்கே அனுப்பி திறமையான, ஏழை எளிய மாணவ - மாணவிகளைக் கண்டெடுத்து, அவர்களுக்கு உயர்கல்வி தருவதில் முழு மூச்சாக ஈடுபட்டு "அகரம்" வழியாக சிகரம் தொட்டுள்ளார் சூர்யா.


இவருக்கு ரசிகர்கள் மட்டும் இன்றி பல்வேறு திரைபிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, நடிகர் சூரியாவின் மனைவி ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.