செய்யாத குற்றத்துக்காக சுமார் 39 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த நிரபராதிக்கு ரூ.150 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரைக் கோலே. தற்போது 71 வயதாகும் இவர் கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்தார்.


தான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தில் அவர் வாதிட்ட போதிலும், இறுதியில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 39 ஆண்டுகள் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கிரைக் கோலேவை கருணை அடிப்படையில் கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் விடுதலை செய்தார்.


விடுதலை செய்யப்பட்டாலும் தன் மீதான களங்கத்தை துடைக்க ஆதாரங்களை திரட்டி, உறுதி குலையாமல் நீதிமன்றத்துக்குச் சென்றார். விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.


அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.150 கோடி (21 மில்லியன் அமெரிக்கடாலர்) இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. நஷ்ட ஈடு கிடைத்த மகிழ்ச்சியை விட என் மீதான குற்றம் துடைக்கப்பட்டுள்ளதே சந்தோசம் அளிக்கிறது என்று கோலே கூறியுள்ளார்.