Weight Loss Through Sex: நவீன காலகட்டத்தில் உடல் பருமன் காரணமாக இளைஞர் தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுமுறை மாற்றம், வாழ்க்கை சூழலில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்டவை இந்த உடல் பருமனுக்கு காரணமாக கூறப்படுகின்றன. உடல் பருமன் இதயம் சார்ந்த நோய்களையும், நீரிழிவு பிரச்னையையும் ஏற்படுத்தும் பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கை விடுகின்றன. உடல் பருமனை தடுக்க பலரும் பல வழிகளை கடைபிடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க... 


உடல் பருமன் ஒருபுறம் என்றால் உடல் பருமனை குறைக்க, அதாவது உடல் எடை குறைப்புக்காக ஜிம் தொடங்கி ஆர்க்கானிக் உணவுகளை சாப்பிடுவது என பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கும் முறைகளை மட்டுமின்றி சில ஆபத்தான முறைகளையும் சிலர் பின்பற்றுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றவதே உடல் எடை குறைப்பில் உபயோகமாக இருக்கும். 


பல வழிகள் இருந்தாலும் தங்களுக்கு ஏற்ற மற்றும் விரைவாக உதவியளிக்கும் முறைகளை பின்பற்றவே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்து நீண்ட தூரம் ஒடுவதை போன்றும், கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை போன்றும் உடலுறவு மேற்கொள்வதும் உங்களின் உடல் எடை குறைப்பு முயற்சியில் நல்ல பலனை கொடுக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. 


மேலும் படிக்க | திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? ‘இந்த’ புத்தகங்களை படிங்க..


உடலுறவில் ஈடுபட்டால் குறையும் கலோரி


ஆம், இதுகுறித்து பாலியல் கல்வியாளர்கள் சிலரும், உடலுறவு உடல் எடைக்குறிப்பிலும் உங்களுக்கு உதவும் என தெரிவிக்கின்றனர். உடலுறவும், ஜாக்கிங், ரன்னிங்கை போன்ற கார்டியோ வகை உடற்பயிற்சிதான் என்றும், உடலுறவில் ஈடுபடும்போது உடல் சார்ந்த இயக்கத்தால் இதயத்துடிப்பு சீராகும், கலோரிகளும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.


 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஆரோக்கியமான நீண்ட உடலுறவின்போது ஆண்கள் மொத்தமாக 101 கலோரிகளையும், அதாவது நிமிடத்திற்கு 4.2 கலோரிகளையும் குறைக்கலாம் என்றும் பெண்கள் மொத்தமாக 69 கலோரிகளையும் குறைக்கலாம், அதாவது நிமிடத்திற்கு 3.1 கலோரிகள். இந்த கணக்கீடு 24 நிமிடங்கள் வரை நீடிக்கும் உடலுறவை குறிக்கிறது. 


ஆரோக்கியமான உடலுறவு


மேலே குறிப்பிட்ட இந்த கலோரிகளை குறைப்பதில், உடலுறவின் தீவிரம், அதன் கால அளவு, உடலுறவின் வேகம் மற்றும் அதன் வகையை பொருத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கின்றனர். சராசரியாக 80-300 கலோரிகள் குறையும் என கூறுகின்றனர். இந்த 300 கலோரிகள் என்பது மிக அதிகம்தான். உங்கள் உடல் எடையில் 1 கிலோ என்றால் 7,700 கலோரிகள் ஆகும். எனவே, ஒரு ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட்டால் 0.034 கிலோ குறையும் என கூறப்படுகிறது. 


அந்த வகையில், நீங்கள் வழக்கமான அனைத்து உடல் எடை குறைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபட்டாலும் அது உங்களின் உடல் எடை குறைப்பில் கூடுதல் நன்மையை தரும் எனலாம். கால அளவை அதிகரிப்பதன் மூலமும், அதிக உடலசவை தரும் போஸிஷன்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், உடலுறவை மேற்கொள்வதன் முன் நெருக்கமாக இருப்பதும் ஆரோக்கிய உடலுறவுக்கு எடுத்துச்சென்று, உடல் எடை குறைப்பில் இன்னும் உதவிகரமாக இருக்கும்.  


மேலும் படிக்க | உங்கள் மனைவி உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாரா-இல்லையா? கண்டுபிடிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ