மருதாணியை விரும்பாத பெண்களே கிடையாது. பண்டைய இந்தியாவின் உடற்கலையில் ஒரு வடிவமே மருதாணி. காய்ந்த மருதாணி இலைகள் மூலம் ஆக்கப்பட்ட பசையினால் மருதாணியின் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் மற்றும் வகைகள் உள்ளன. இவற்றுள் பிரதானமாக அராபிய மருதாணி வடிவம், இந்திய மருதாணி வடிவம் மற்றும் பாகிஸ்தானிய மருதாணி வடிவம் போன்றவற்றைக் குறிப்பிடாலாம். பெண்கள் தமது கைகள் மற்றும் கால்களுக்கு பல்வேறு விதமான மருதாணி அலங்கார வடிவங்களை இடுவார்கள். 


மருதாணி நன்கு சிவப்பு நிறமாக தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதற்காக சில எளிய முறைகளை பின்பற்றினால்போதும்.


> மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.


> யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி, பின்னர் மருதாணி இட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.


> கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் ஆவிபிடிப்த்தால் அடர்த்தியான நிறம் கிடைக்கச் செய்யும்.


> சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதும் நல்ல பலன்  கிடைக்க வழிவகுக்கும்.


> மருதாணி இட்டபின் குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.