பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிக்க இருக்கும் படம் குப்பத்து ராஜா. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் பார்த்திபன் நடித்துள்ளார். ஜி.வி.பியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் தற்போது குப்பத்து ராஜா படத்தின் "எங்க ஏரியா எங்களுது" என்ற ஆடியோ வெளியாகி உள்ளது, இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியும் வருகிறது.



‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.