சனிபகவானின் தாக்கத்தால் இவர்களுக்கு இக்கட்டான நிலை: எச்சரிக்கை தேவை
Sani Peyarchi 2022: சனி பகவானின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சனிப்பெயர்ச்சி 2022: சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த மாதம் சனியின் ராசி மாறப்போகிறது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் மகர ராசிக்குள் நுழைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். சனி பகவானின் இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் முதல் கட்டம் விரைய சனி என்றும், இரண்டாம் கட்டம் ஜென்ம சனி என்றும், மூன்றாம் கட்டம் பாத சனி என்றும் அழைக்கப்படுகின்றது.
ஜோதிடத்தின் படி, அதன் இரண்டாம் கட்டமான ஜென்ம சனி மிகவும் இக்கட்டான கட்டமாக பார்க்கப்படுகின்றது. இதை ஒருவர் அனுபவிக்கும் போது பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்.
சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: கன்னி ராசியினருக்கு பண வரவு உண்டாகும்
இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும்
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த சனிப்பெயர்ச்சியால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டரை வருட சனி தசை தொடங்கும். மேலும், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரைநாட்டு சனியின் தாக்கம் துவங்கவுள்ளது. மிதுனம் மற்றும் துலா ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் கடுமையான தாக்கத்திலிருந்து விடுதகை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரைநாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.
சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார்
ஏழரைநாட்டு சனியின் தாக்கம் ஏழரை ஆண்டுகாலம் இருக்கும். ஒவ்வொரு கட்டத்தின் தாக்கமும் இரண்டரை ஆண்டு காலம் இருக்கும். தற்போது, சனி பகவான் மகர ராசியில் இருக்கிறார். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும்?
சனியின் கோபத்திலிருந்து விடுபட, சைத்ர நவராத்திரியின் அஷ்டமி திதி விசேஷமாகக் கருதப்படுகிறது. இது மகா அஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மகாகௌரியான பார்வதி தேவி-யை வணங்க வேண்டும். பொதுவாகவே அஷ்டமி நாட்களில் அம்மனை வழிபடுவதால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
அஷ்டமி நாட்களில் துர்கா சாலிசாவை பாராயணம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் சனி சாலிசா மற்றும் ஹனுமான் சாலிசா ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஸ்ரீ ராம நவமி 2022 வழிபடும் முறை, நேரம், நெய்வேத்தியம் மற்றும் பலன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR