High Court order: குடும்பத்தில் மகளை விட மருமகளுக்கு அதிக உரிமை உண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு
`குடும்பத்தில் மகளை விட மருமகளுக்கு அதிக உரிமை உண்டு` என்ற உயர்நீதிமன்றம் உத்தரவு புதிய பாதையை திறந்துள்ளது.
சார்பதிவாளர் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் புதிய முறையை உருவாக்கி, மருமகளை குடும்பப் பிரிவில் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனுடன், 2019 ஆகஸ்ட் 5, தேதியிட்ட உத்தரவில் மாற்றங்களைச் செய்யவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மகளை விட மருமகளுக்கு அதிக உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கடை நடத்த உரிமம் பெற்றவர் இறந்ததால் வாரிசுகளுக்கு ரேஷன் கடையை ஒதுக்கிய வழக்கில் மகனின் மனைவியான மருமகளை குடும்பத்தில் சேர்க்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மருமகளின் உரிமை
உத்தரபிரதேச அத்தியாவசிய பொருட்கள் ஆணை 2016 இல், மருமகள் குடும்ப பிரிவில் வைக்கப்படவில்லை, இதன் அடிப்படையில், மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (High Court Verdict), உரிமம் பெற்றவர் இறந்த பிறகு, மருமகளுக்கும் அந்த உரிமத்தை பெறுவதற்கான உரிமை, மகளுக்கு இருப்பதைப் போலவே இருக்கிறது. இது பாலின சமத்துவம் தொடர்பான விஷயத்தில் மிகவும் முக்கியத் தீர்ப்பாக கருதப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று, உத்தரப்பிரதேச மாநில உணவு மற்றும் வழங்கல் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் மருமகளுக்கு ரேஷன் கடையை பெற உரிமை இல்லை என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் மருமகளுக்கு ரேஷன் கடை உரிமம் வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர் 2021 ஜூன் 17ம் தேதியன்று மறுத்துவிட்டார்.
ALSO READ | கிளப்புகளில் ’அந்த’ விஷயங்களை கண்காணியுங்கள் - உயர்நீதிமன்றம்
இந்த தீர்ப்பை எதிர்த்து மருமகள் புஷ்பாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். புஷ்பா தேவியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நீரஜ் திவாரி இந்த முக்கிய தீர்ப்பை அளித்துள்ளார்.
உணவுத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவு
மனுதாரருக்கு ரேஷன் கடை உரிமத்தை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரின் மாமியாரின் பெயரில் ரேஷன் கடை நடத்துவதற்கான உரிமம் இருந்தது. மாமியார் 2021 ஏப்ரல் 11ம் தேதியன்று இறந்தார். ரேஷன் கடை உரிமம் வைத்திருந்தவரின் மகன் ஏற்கனவே இறந்தவிட்ட நிலையில், அந்த உரிமத்தை தனக்கு வழங்கக் கோரிய புஷ்பாவின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது.
கைம்பெண்ணான மருமகள் புஷ்பா மற்றும் அவரது இரண்டு மைனர் குழந்தைகளைத் தவிர, மனுதாரரின் குடும்பத்தில் வேறு வாரிசு யாரும் இல்லை என்பதன் அடிப்படையில் தனக்குக் உரிமத்தை வழங்க வேண்டும் என்று மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
READ ALSO | வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு புதிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR