புது தில்லி: மலிவு விலை வீட்டுத் தேவையை அதிகரிக்கும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 1 ஏப்ரல் 2019 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வாங்கிய வீட்டுக் கடன் வட்டியில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரி விலக்கு பெறும் தேதியை நீட்டித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AY 2020-21 (FY 2019-20) இலிருந்து வட்டிக் கழிப்பை அனுமதிக்கும் வகையில், 1961 இன் வருமான வரிச் சட்டம் 80EEA சேர்க்கப்பட்டது. இது பிரிவு 80EE இல் இருந்த முந்தைய விதிமுறைகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட அம்சமாக இருந்தது. பழைய விதியில், 1 ஏப்ரல் 2016 முதல் மார்ச் 31, 2017 வரை நிதி நிறுவனத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட கடனுக்காக முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் செலுத்தும் வட்டிக்கு 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்க அனுமதி இருந்தது. 


இருப்பினும், ஏப்ரல் 1, 2022 முதல், 80EEA பிரிவின் கீழ் மலிவு விலை வீடுகளுக்குக் கிடைக்கும் கூடுதல் வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2022 அறிவிப்பில் இந்த வரிச் சலுகையை 2022-23 நிதியாண்டுக்கு நீட்டிக்கவில்லை.


மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் இந்த 10 மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்


2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.1.5 லட்சம் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டது. முதல் முறையாக வீடுகளை வாங்குபவர்களுக்கு, ரூ. 45 லட்சம் வரையில் இது அனுமதிக்கப்பட்டது. மேலும் மார்ச் 2020 வரை அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் மார்ச் 2022 வரை இது நீட்டிக்கப்பட்டது.


ரியல் எஸ்டேட் தொழில்துறையில் தேவைகளுக்கான பெரும் மந்தநிலை நிலவி வருகிறது. வீட்டு விற்பனைகளும் மிகவும் குறைந்துள்ளன. ரியல் எஸ்டேட் துறை இந்த கூடுதல் கழிப்பின் நீட்டிப்பை கோரி இருந்ததோடு, ரூ.45 லட்சம் என்ற வரம்பிலும் மாற்றத்தை நாடி இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Income Tax Rules: ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR