சிட்னியின் Sea Life Aquarium-ல் வசித்து வரும் ஒரினச்சேர்க்கை பென்குயின்கள் விரைவில் குழந்தை பெற்றெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் உள்ளது பிரபல நீர்வாழ் காட்சிசாலை Sea Life Aquarium. இங்கு Magic  மற்றும் Sphen என்னும் இரண்டு ஓரினச்சேர்க்கை பென்குயின்கள் வசித்து வருகின்றன. ஓரினச்சேர்க்கை பென்குயின்கள் என்பதால் இவர்களுக்கு குழந்தை பிறப்பது என்பது....???.


எனவே Sea Life Aquarium ஊழியர்கள் இந்த ஓரினச்சேர்க்கை ஜோடிக்கு என பென்குயின் முட்டை ஒன்றினை வழங்கியுள்ளனர். இந்த முட்டையினை அடைக்காத்து குஞ்சுபொறிக்க Magic  மற்றும் Sphen முயற்சித்து வருகின்றன. தற்போது பென்குயின்களுக்கான இனப்பெருக்க காலம் என்பதால் நீர்வாழ் காட்சிசாலையில் உள்ள பென்குயின்கள் தங்களது முட்டைகளை அடைக்காத்து வருகின்றன. இந்த செயல்பாட்டிற்காக ஒவ்வொரு பென்குயின் ஜோடியும் தங்களுக்கென ஒரு தனி கூட்டை வடிவமைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது Magic  மற்றும் Sphen ஜோடியும் தங்களக்கு கொடுக்கப்பட்ட முட்டையினை, தங்களால் கட்டப்பட்ட கூட்டினில் வைத்து அடைகாத்து வருகின்றன..



இதுகுறித்து Sea Life Aquarium ஊழியர்கள் தெரிவிக்கையில்... முன்னதாக Magic  மற்றும் Sphen ஜோடிக்கு போலி முட்டை ஒன்று வழங்கப்பட்டு அவை முட்டையினை எவ்வாறு பராமரிக்கின்றது என சோதிக்கப்பட்டது. இதன் பின்னரே தற்போது இந்த ஜோடிக்கு நிஜ முட்டை அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கொடுத்த முட்டையினை Magic  மற்றும் Sphen ஜோடி நன்றாக பாதுகாத்து தங்களுக்கென ஒரு குட்டியை ஈன்றெடுப்பர் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.