ராசிபலன் டிசம்பர் 8 2021: புதன்கிழமை அன்று காதல் உறவுகள் மகிழ்ச்சியளிக்கும். மேஷம், ரிஷபம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு காதல் தேனாய் இனிக்கும். வீட்டில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், குடும்பத்தினரும் உறவுகள் கெட்டுப்போகலாம். எனவே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: திருமண விஷயங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் தென்படும். திருமணமானவர்கள் வாழ்க்கை துணையுடன் அற்புதமான உறவை அனுபவிப்பீர்கள். காதலையும், அன்பையும் வெளிப்படையாக வெளிப்படுத்த ஏற்ற நாள்.


ரிஷபம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும். ஒருவருடன் ஆன்மீக தொடர்பு ஏற்படலாம். இன்று நீங்கள் பலரை வசீகரிக்கும் வாய்ப்பு தென்படுகிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.


மிதுனம்: காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவையும் பாசத்தையும் பெற்றாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக வருத்தப்படுவீர்கள்.


கடகம்: குடும்ப உறுப்பினர்களுடன் மனதளவில் இருக்கும் இடைவெளியை நீக்க இது ஒரு நல்ல நேரம். உங்கள் அணுகுமுறை மாறும், உங்கள் மனநிலை மிகவும் நிலையற்றதாக இருக்கும். உங்கள் தோற்றம் அல்லது உடையில் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்யலாம்.


சிம்மம்: காதல் உறவுகள் சாதகமாக இருக்கும். உறவினர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் எளிதில் தீரும். குடும்ப உறுப்பினர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் ஒரு சுப காரியத்தை ஏற்பாடு செய்ய உகந்த நாள். சில நல்ல செய்திகள் வந்து சேரும். 


ALSO READ | சனி பகவானின் நேரடி தாக்கம்: சிலருக்கு சோதனை, சிலருக்கு சாதனை


கன்னி: எதிர்ப்புகள் வைத்துக் கொள்ள வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அன்புக்குரியவர்களுடன் சண்டைகள் ஏற்படலாம், அது மோதலாக உருவாக அனுமதிக்காதீர்கள். விஷயங்கள் கையை மீறுவதற்கு முன், அவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வர்த்தகர்கள் இப்போது தங்கள் விரிவாக்கத் திட்டங்களைத் தொடரலாம்.


துலாம்: நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தவறான புரிதல் ஏற்படலாம். உண்மைகளை ஆதாரமற்று திரித்து கூறுவது தொடர்பான விஷயங்களால் தனிப்பட்ட உறவுகளில் அவநம்பிக்கை மற்றும் அதிர்ச்சி ஏற்படும். சிறந்த பலன் கிடைத்து ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றவும்.


விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஈகோ மோதல் திருமண உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் மிகவும் பழைய நண்பருடன் பிரிந்து செல்லலாம். தீவிர வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளிப்படையாக வெளியில் வந்தால்தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


தனுசு: இன்று மகிழ்ச்சியும், சந்தோஷமும் உங்களிடம் நிலைத்து இருக்கும். உங்களுக்கு இருந்த பழைய தவறான எண்ணங்களைப் பற்றி சிந்தித்து அவற்றை அகற்றுவதற்கான வழிகளைப் பார்ப்பீர்கள். புதிய நண்பர்களை உருவாக்கி குழு நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். குடும்ப உறவினர் ஒருவர் உங்களுக்கு உதவுவார்.


மகரம்: நீங்கள் காதலை முன்மொழிய திட்டமிட்டால், அதற்கு இதுவே சிறந்த நேரம். திருமணமான தம்பதிகள் இன்று அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். மன அழுத்தத்தைக் குறைக்கவும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் இதுவே சிறந்த நேரம்.


கும்பம்: இனிமையாகவும் சுமுகமாகவும் பேசுவதன் மூலம் காதலியின் மனதை வெல்வீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த நாள் மிகவும் நல்லது.


மீனம்: குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். அன்பின் சில தருணங்களுடன் உங்கள் திருமண வாழ்க்கை அழகான திருப்பத்தை எடுக்கும். ஆர்வங்கள், அனுபவங்கள் மற்றும் யோசனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR