Horoscope November 22, 2021: சண்டை போட்டே பாடாய்படுத்தும் ராசி இவர்கள் தான்
Zodiac Sign: கன்னி, கும்பம், கடகம் ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும்.
Zodiac Sign: ஜோதிடத்தின் உதவியுடன் எந்தவொரு நபரின் தன்மையையும் அறிந்து கொள்வது மிகவும் எளிதானது. ஒரு நபரின் அடையாளம் ராசியிலிருந்து நெருக்கமாக காண முடியும். அப்படி சிலர் இயல்பிலேயே மிகவும் கோபமாகவும் சண்டை போடுபவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வார்கள், நிதானத்தை இழந்து விடுவார்கள். சதா சர்வநேரமும் சண்டை போட்டுக்கொண்டே இருபார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த 5 ராசிக்காரர்களிடம் கோபம், சண்டை போடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த ராசி யாரெல்லாம் எனப் பார்ப்போம்..
மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் தூய்மையானவர்கள். ஆனால் கோபத்தின் விஷயத்தில் கொஞ்சம் கூர்மையாகத்தான் இருபார்கள். யாராவது தங்களுக்குத் தவறு செய்தால், அவர்கள் கோபத்தில் நிதானத்தை இழந்து விடுவார்கள்.
ALSO READ | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்
ரிஷபம் - ஜோதிடத்தின் (Zodiac Signs) படி, இந்த ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் புத்திசாலிகள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் கோபம் வந்தால் இவர்களை கையாள்வது சிரமம். ரிஷபம் ராசிக்காரர்களின் கோபம் தணிய நீண்ட காலம் எடுக்கும். அவர்களை சமாதானம் செய்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்கள் கடுகடு என்று இருக்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் தனது விருப்பப்படி அனைத்தையும் செய்ய விரும்புகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் யாருடைய ஆலோசனையையும் விரும்ப மாட்டார்கள். அது அவர்களின் விருப்பப்படி இல்லை என்றால், அவர்கள் கோபப்படுவார்கள். இதுமட்டுமின்றி, பல சமயங்களில் தங்கள் மேலாதிக்கத்தைக் காட்ட மோசமாக சண்டையிடுவதும் உண்டு.
துலாம் - இந்த ராசிக்காரர்கள் இயற்கையில் சமநிலையுடன் இருப்பார்கள், ஆனால் சில நேரங்களில் அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். அவர்களின் மனநிலையைப் பார்த்த பிறகே அவர்களிடம் பேசுவது நல்லது. இருப்பினும், துலாம் ராசிக்காரர்களின் கோபம் சிறிது நேரத்தில் தணிந்து விடும்.
விருச்சிக ராசி- ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கோபம் கொண்டவர்கள். சில நேரங்களில் அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும், ஆனால் சில நேரங்களில் அவர்கள் மோசமாக தங்கள் கோபத்தை வெளிபடுத்துவார்கள். கோபத்தில், யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள், மற்றவர்களை அவமதிப்பார்கள்.
ALSO READ | ஆடம்பரமாய் வாழ நினைக்கும் இந்த 4 ராசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR