யுபிஐ பணப்பரிவர்த்தனை வந்தபிறகு எல்லோரும் மொபைல் வழியாகவே பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம் கார்டு தேவைப்படும். அவற்றில் இருக்கும் எண், காலாவதி தேதி ஆகியவற்றை கொண்டு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதனை குறி வைத்து மோசடி கும்பல் களமிறங்கியிருக்கிறது. உங்களின் ஏடிஎம் கார்டு தகவல்களை திருட்டுத் தனமாக பெற்று, இத்தகைய மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். இது ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபரின் ஏடிஎம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் உள்ள தகவல்களை திருடும் ஒரு வகை மோசடி ஆகும். ஏடிஎம்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மற்ற கார்டு-ரீடிங் மெஷின்களில் நிறுவப்பட்ட ஸ்கிம்மிங் சாதனங்கள் மூலம் அவர்கள் ஸ்கிம்மிங் செய்கிறார்கள். இந்த ஸ்க்கிம்மிங்  இயந்திரங்கள் ஒரு நபர் தனது கார்டை ஸ்வைப் செய்யும்போதோ அல்லது செருகும்போதோ அந்த அட்டைத் தகவலைப் சேகரித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். 


மேலும் படிக்க | பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி..! கிரெடிட் கார்டு பில்லை இப்படியும் செலுத்தலாம்


மோசடியாளர்கள் ஸ்கிம்மிங் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?


ஸ்கிம்மிங் சாதனம் ஒரு நபரின் அட்டைத் தகவலைப் பிடித்த பிறகு, குற்றவாளிகள் போலி அட்டையை உருவாக்குவார்கள். குறிப்பிட்ட பொருள்களை வாங்கவும் அல்லது நபரின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும் பயன்படுத்துகின்றனர். இன்னொரு வகை மோசடி என்னவென்றால், ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுக்கும்போது உங்களுக்கு அருகில் இருக்கும் மெஷினில் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டு, ஸ்கிமிங் மெஷினை அவர்களிடத்தில் வைத்திருப்பார்கள். அந்த மெஷின் உங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவலை பெற்றுக் கொடுத்துவிடும். இதில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. 


உங்கள் டெபிட் கார்டை எவ்வாறு பாதுகாப்பது? 


* ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங்கிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கார்டு ரீடரைப் பயன்படுத்தும் போது, உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் உள்ளதா? என உங்கள் கணக்கு அறிக்கைகளை தவறாமல் சரிபார்க்க வேண்டும்.
* உங்கள் PIN எண்ணை உள்ளிடும் போது கீபேடை மறைப்பது நல்லது, ஏனெனில் குற்றவாளிகள் உங்கள் பின்னைப் பிடிக்க சிறிய கேமராக்களைப் பயன்படுத்தலாம்.
* ஏடிஎம் இயந்திரத்தின் கார்டு செருகும் ஸ்லாட் அல்லது கீபேடுக்கு அருகில் கூடுதல் சாதனம் எதுவும் இணைக்கப்படவில்லை என்பதைச் சரிபார்ப்பது நல்லது.
* உங்கள் ஏடிஎம் கார்டில் பின்னை எழுத வேண்டாம்.
* உங்களுக்கு அருகில் நிற்கும் வேறு / தெரியாத நபர் முன்னிலையில் பின்னை உள்ளிட வேண்டாம்.


மேலும் படிக்க | மக்களே உசார்! மார்ச் 31-க்குள் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ