சாணக்கியர் நீதி என்பது எல்லோருக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் காதல் வாழ்க்கை வெற்றி பெறுவதற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நீங்கள் காதலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர் சொல்லும் சில அடிப்படையான குறிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது நிச்சயம் உங்கள் காதல் வெற்றியடைய உதவியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரியாதை


இணக்கமான உறவுக்கு மரியாதை மற்றும் பாராட்டு அவசியம். காதலில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வதுடன், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பாராட்ட பழகிக் கொள்ள வேண்டும். உரிய மரியாதை கொடுப்பதுடன் நல்ல வார்த்தைகளை எப்போதும் உபயோகிக்க வேண்டும்


நம்பிக்கை


காதலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒருவர் மீதான ஒருவர் நம்பிக்கை மிக முக்கியம். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கை பேணுவது அவசியம். எந்தவொரு இடத்திலும் நம்பிக்கை குலையும் வகையில் நடந்து கொள்ளவே கூடாது. உங்களின் அணுகுமுறையே பிறர் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும். 


மேலும் படிக்க | நடையை வைத்தே நீங்கள் பலவீனமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம், எப்படி?


பொறுப்பு

 

பொறுப்புடன் செயல்படுவது என்பது காதலில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று என்கிறார் சாணக்கியர். நிதி விவகாரங்களை கையாள்வது, சரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நிதானத்துடன் ஒரு விஷயத்தை அணுகுவது எல்லாமே காதலில் இருக்கும்போது மிகமிக முக்கியம். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அணுகாமல் உரிய காலம் எடுத்து ஒரு விஷயத்தை செய்து முடிக்க முயற்சிப்பது உங்களின் பொறுப்பை உணர்த்தும். 

 

பிரச்சனைகள் கையாள்வது

 

பிரச்சனைகளை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் காதல் வெற்றி தோல்வி தீர்மானமாகும் என்கிறார் சாணக்கியர். தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், எந்த முடிவு பிரச்சனைகளை முடிக்க சரியாக இருக்குமோ அந்த முடிவை எடுப்பது என்பது இக்கட்டான சூழல்களில் உங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும். இது உங்கள் காதல் வெற்றி பெற மிக மிக உதவியாக இருக்கும். 

 

நேர்மையான அணுகுமுறை

 

எப்போதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கவும். இது ஒரு சிம்பிளான விஷயம் என்றாலும் இதனை சரியாக கடைபிடிக்காமல் இருப்பதால் தான் பலரும் பல விஷயங்களில் சுற்றி வளைத்து தீர்வை எட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உணவுர்வுகள், கவலைகள் எல்லாவற்றையும் காதலி தெரிந்து கொள்ள வேண்டும். மறைத்தால் சந்தேகத்தை அதிகபடுத்துமே தவிர நேர்மறையான எண்ணங்களை உருவாக்காது என்கிறார் சாணக்கியர். இதன்படி நடந்து உங்கள் காதலில் நீங்கள் வெற்றி பெறுங்கள். 

 

வெளிப்படையாக நேர்மையாக இருங்கள்

கணவன் மனைவியிடையே தெளிவான மற்றும் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார். காதல் உறவில் வலுவான பிணைப்பை பராமரிக்க தம்பதிகள் தங்கள் எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் கவலைகள் மற்றும் தன் முழு விவரம் குறித்து தொடர்ந்து தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ