நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஒருநாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை..!
Health Tips : ஒருவர் ஆரோக்கியமாக இருக்க நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட கலோரிகள் தேவை, அவை எந்நெத்த உணவுகள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Health Tips Tamil : இப்போதைய நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக மோசமான வாழ்க்கை முறை இருக்கிறது. அதில் தவறான உணவுப்பழக்கம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தேவைக்கு அதிகமாக ஒருவர் சாப்பிடும்போது, தேவையில்லாத உணவை எடுத்துக் கொள்ளும்போது உடலில் அதிக கலோரிகள் சேர்ந்து, அவை செரிமானம் ஆக முடியாமல் ஆரோக்கிய பிரச்சனைகளாக மாறுகின்றன. அதனால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி, கொழுப்பு கல்லீரல், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அதனால் தினம் சாப்பிடும் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் கவனம் செலுத்துவது அவசியம். அத்துடன் உடற்பயிற்சிகள் செய்வதும் கட்டாயம். அதற்கு முதலில் நாள் ஒன்றுக்கு என்னென்ன ஊட்டச்சத்துகள் தேவை, எத்தனை கலோரிகள் தேவை என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை கணக்கிட்டு, பக்கவிளைவுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரிகள் தேவை?
ஒருவர் ஆரோக்கியமாக தினசரி உணவின் மூலம் 2500 கலோரிகள் தேவைப்படுகின்றன. ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2000 கலோரிகள் தேவை. மேலும், அதிக கலோரிகள் இருந்தால், ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.
மேலும் படிக்க | 'நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம்' நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்
உணவின் அடிப்படையில் கலோரிகளின் அளவீடு
அரிசி - 130
நான் - 311
ரொட்டி - 264
தால் - 101
காய்கறி - 35
தயிர் - 100
காலை உணவின் கலோரி கணக்கீடு
1 கிளாஸ் பால் - 204
2 சப்பாத்தி/ரொட்டி - 280
1 ஸ்பூன் வெண்ணெய் - 72
பச்சை காய்கறிகள் - 35
உலர் பழங்கள் - 63
எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கவும். மேலும், பாகற்காய் சூப், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுங்கள். அரிசியின் உட்கொள்ளலைக் குறைக்கவும். நிறைய சாலட் சாப்பிடுங்கள். சாப்பிட்ட 1 மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும்.
திரிபலா சாப்பிடவும்
செரிமானத்தை மேம்படுத்த, தினமும் திரிபலா சாப்பிடுங்கள். இரவில் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் திரிபலாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் வாயு, அமிலத்தன்மை, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறையும். திரிபலா சாப்பிடுவதால் உடல் எடையும் விரைவாக குறையும்.
மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் கேரளாவை சுற்றிப் பாருங்க... 8 சுற்றுலா தலங்களை உடனே நோட் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ