இன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதன் முக்கியத்துவம் கருதி இது நமது மற்ற அடையாள ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் கருவிழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.  புதிய ஆதார் அட்டையை உருவாக்க அல்லது ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் தங்கள் தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்க குடிமக்கள் செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட கட்டணங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யுஐடிஏஐ) ஒரு சுற்றறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வங்கிக் கணக்கு தொடங்குவது, கேஒய்சி செய்வது, ரேஷன் கார்டு பெறுவது, ஓட்டுநர் உரிமம் பெறுவது அல்லது அரசு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது என எதுவாக இருந்தாலும் ஆதார் அட்டை தான் அதற்கு அவசியமாகிறது.  இவ்வளவு ஏன் நாம் ஒரு சிம் கார்டை வாங்குவதற்கும் கூட ஆதார் அட்டையை தான் அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.  அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டுமே பயன்படுத்த முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்


ஒரு ஆதார் அட்டையை வைத்து இவ்வளவு சிம் கார்டுகளை மட்டும் தான் பெற முடியும் என்கிற விதி இருப்பதால், பலரும் பல நபர்களின் ஆதார் கார்டுகளை வைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளனர், ஆனால் ஆதார் அட்டை வைத்திருப்பவருக்கு இது பற்றி தெரிந்திருக்காது.  உங்கள் ஆதார் அட்டையை வைத்து எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டறிய முடியும். இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளின் வழக்குகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன, இதன் காரணமாக கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அரசுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இது தொடர்பாக, தொலைத்தொடர்பு துறைக்கு (DoT) இணையதளம் வெளியிடப்பட்டது, DoT tafcop.dgtelecom.gov.in போர்ட்டல்  மூலம், தங்களின் ஆதார் அட்டையில் எத்தனை சிம்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை யார் வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ள முடியும்.  இது தவிர, அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை தடுப்பதற்கான கோரிக்கையையும் அனுப்ப முடியும், அந்த பட்டியலில் ஏதேனும் போலி சிம் கார்டு இருந்தால் அதையும் பிளாக் செய்யலாம்.  பயன்பாட்டில் இல்லாத சிம் கார்டுடன், அதை உங்கள் தளத்திலிருந்து அகற்ற விரும்பினால் அதையும் அகற்றலாம்.


- முதலில் நீங்கள் https://tafcop.dgtelecom.gov.in/ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


- அதன் பிறகு இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.


- இப்போது மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.


- ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு ஆக்ஷன் என்கிற ஆப்ஷன் கிடைக்கும்.


- ஆக்ஷன் என்கிற பட்டனை நீங்கள் கிளிக் செய்தால், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அனைத்து சிம் கார்டு எண்களும் காட்டப்படும்.


- மறுபுறம் சட்டவிரோத எண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை நீங்கள் பிளாக் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ