புதுடில்லி: இன்று குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 25 பைசா குறைக்கப்பட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து  5.75%-மாக குறைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி எவ்வளவு குறைந்துள்ளது. அதன் மூலம் மாதந்தோறும் செலுத்தும் தவணையில் எவ்வளவு பணம் குரிந்துள்ளது. அதனால் எவ்வளவு பணம் வாடிக்கையாளர்களுக்கு மிச்சம் ஆகும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய நடவடிக்கையாக குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளான நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (RTGS) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மீது விதிக்கப்பட்டு வரும் கட்டணத்தை அகற்றுவதாக அறிவித்துள்ளது.


எவ்வளவு குறைந்தது - எவ்வளவு சேமிப்பு:-


20 வருடங்களுக்கான வீட்டு கடன் (மாத தவணை)


கடன் முன்பு(9.55%) தற்போது (9.3%)
20 லட்சம்  18708 18382
30 லட்சம்  28062 27573
50 லட்சம்  46770 45955

5 ஆண்டுக்கான வாகன கடன்கள் (மாத தவணை)


கடன் முன்பு(9.3%) தற்போது((9.05%)
5 லட்சம் 10452 10391
10 லட்சம் 20904 20783
15 லட்சம் 31356 31174

3 வருட தனிநபர் கடன் (மாத தவணை)


கடன் முன்பு (12.50%) தற்போது (12.25%)
2 லட்சம் 6690 6667
3 லட்சம் 10036 10000
5 லட்சம் 16726 16667